Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வயநாட்டில் 8-வது நாளாக மீட்புப்பணி: பலி எண்ணிக்கை 406 ஆக உயர்வு!

10:23 AM Aug 06, 2024 IST | Web Editor
Advertisement

வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 406 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தொடர்ந்து 8வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. 

Advertisement

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த 29-ம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவால் சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை போன்ற கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பகுதிகளில் இருந்த வீடுகளும் மண்ணால் மூடப்பட்டன. 400 குடும்பங்கள் இந்த நிலச்சரிவில் சிக்கினர்.

சுமார் 1000த்திற்கும் அதிமானோர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்காக தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், விமானப் படையினர் உள்ளிட்டோர் தொடர்ந்து 8வது நாளாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மண்ணில் புதையுண்டவா்களின் உடல்களை மோப்ப நாய்கள், மனிதர்களை மீட்கும் ரேடார், ஜிபிஎஸ் தொழில்நுட்பம், ஆளில்லா விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை 406 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 187 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகள் மட்டுமின்றி ஆறுகளிலும் சடலங்களை தேடி வருகின்றனர். நிலச்சரிவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள புதுமலையில் அடையாளம் தெரியாத 29 உடல்கள், 184 உடல்பாகங்கள் ஒரே இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. சூச்சிப்பாறை பள்ளத்தாக்கு பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி துவங்கப்பட்டுள்ளது.

Tags :
Keralakerala landslideMundakkaiNews7Tamilnews7TamilUpdatesWayanadWayanad Landslide
Advertisement
Next Article