For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

2023ல் ரீரிலீஸ் செய்யப்பட்டு கவனம் ஈர்த்த தமிழ் படங்கள்..!

01:23 PM Dec 31, 2023 IST | Web Editor
2023ல் ரீரிலீஸ் செய்யப்பட்டு கவனம் ஈர்த்த தமிழ் படங்கள்
Advertisement

2023ல் ரீலீஸ் செய்யப்பட்டு மக்களிடையே அதிகம் கவனம் பெற்ற படங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Advertisement

2023 ஆண்டு இன்னும் நாளையுடன் முடிவுக்கு வருகிறது. பல முக்கிய நிகழ்வுகளை இந்த ஆண்டு மக்கள் சந்தித்துள்ளனர். அரசியல், சினிமா , பொருளாதாரம், விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்த முக்கிய நிகழ்வுகள் இந்த ஆண்டு ஏராளமாக நடந்துள்ளன. அந்த வகையில் தமிழ் சினிமாவில் ரிரீலீஸ் செய்யப்பட்டு கவனம் ஈர்த்த தமிழ் படங்கள் பற்றி விரிவாக அலசுகிறது இந்த தொகுப்பு.

ரீரிலீஸ் செய்யப்பட்ட படங்கள் :

2023ம் ஆண்டில் சில தமிழ் படங்கள் ரீரிலீஸ் செய்யப்பட்டன. உள்ளிட்ட படங்கள் ரீரிலிஸ் செய்யப்பட்டு திரையரங்க உரிமையாளர்களுக்கு வசூலை அள்ளி கொடுத்தது.

வடசென்னை

வெற்றிமாறன் இயக்கத்தில் 2018-ம் ஆண்டு வெளியான படம் வடசென்னை. தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். திரையரங்கில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தனுஷின் “3  ” திரைப்படம் :

3 என்பது நடிகர் தனுஷ் நடிப்பில் 2012இல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும்.  இத்திரைப்படமானது தெலுங்கு, இந்தி மொழிகளிலும் மொழி மாற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இப்படமானது தனுசின் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் அவரது தந்தை கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் வெளிவந்தது. இப்படத்தில் இடம்பெற்ற கொலவெறி பாடல் உலகப் புகழ் பெற்றது

வாரணம் ஆயிரம்

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு  ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படம் வெளியானது.  இந்த திரைப்படம்  அப்பா – மகனுக்கு இடையேயான உறவின் நெருக்கத்தையும், வாழ்க்கைப் பிரச்னைகளுடனும் இணைத்து உருவாக்கப்பட்டது. 15 ஆண்டுகளுக்கு பிறகு ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படம் தமிழ்நாட்டில் பல்வேறு திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது.

விண்ணைத் தாண்டி வருவாயா

விண்ணைத்தாண்டி வருவாயா 2010ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படமாகும்.  இத்திரைப்படத்தை  இயக்குனர் கௌதம் மேனன் இயக்கியுள்ளார். இப்படத்தில் சிலம்பரசன்த்ரிஷா மற்றும் கணேஷ் ஜனார்தனன்ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் பிப்ரவரி 262010 ல் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. இப்படத்திற்கு ஏ.ஆர்,ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

வசந்த மாளிகை

இந்திய சினிமாவின் நடிப்பு பல்கலைக்கழகம், நடிகர் திலகம், செவாலியே என போற்றப்படுபவர் மறைந்த நடிகர் சிவாஜி கணேசன்.  எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடும் சிறப்புடையவர் சிவாஜி கணேசன். அப்போதும் சரி, இப்போதும் சரி, எப்போதும் சரி யார் நடிக்க வந்தாலும் அவர்களின் ஹீரோவாக இருப்பவர் சிவாஜி கணேசன் மட்டுமே.

அந்த வகையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வசந்த மாளிகை திரைப்படம் கடந்த 1972ம் ஆண்டு வெளிவந்து வெள்ளி விழா கண்டது. 50 வருடங்கள் கடந்திருக்கும் இப்படத்தை இந்த வருடம் மூன்றாவது முறையாக ரீ-ரிலீஸ் செய்தனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 திரையரங்குகளில் வெளியிடப்பட்ட வசந்த மாளிகை திரைப்படம் தற்போது வரை நல்ல வரவேற்பை பெற்றது.

சுப்பிரமணியபுரம்

நடிகரும், இயக்குநருமான சசிகுமார் இயக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு, ஜூலை 4 ஆம் தேதி வெளியான படம் ‘சுப்ரமணியபுரம்’. ஜேம்ஸ் வசந்தன் இசையில் வெளியான இப்படத்தில் ஜெய், சசிகுமார், சமுத்திரகனி, சுவாதி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சசிகுமார், ஜேம்ஸ் வசந்தன் இருவருக்குமே முதல் படமாக வெளிவந்த இப்படம் விமர்சனரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

சுப்ரமணியபுரம் திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், மதுரை சினிப்பிரியா திரையரங்கம், வெற்றி, மேலூர் கணேஷ் ஆகிய திரையரங்குகளில் இப்படம் ரீ ரீலிஸ் செய்யப்பட்டது.

புதுப்பேட்டை

வடசென்னையின் வாழ்க்கையை அரசியலுடன் இணைத்து விமர்சகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்திய தனுஷின் புதுப்பேட்டை ஆகிய படங்கள் இன்று பல திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளன. இப்படத்தை செல்வராகவன் இயக்கியிருந்தார். யுவன் சங்கர் ராஜாவின் இசையில் தனுஷுக்கு திருப்புமுனையாக இப்படம் அமைந்தது.

ஆளவந்தான்

கடந்த 2001-ம் ஆண்டு கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து திரையரங்குகளில் வெளியான படம் ‘ஆளவந்தான்’. சுரேஷ் கிருஷ்ணா இப்படத்தை இயக்கியிருந்தார். தயாரிப்பாளர் தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ தயாரித்த இப்படத்தில் ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா, சரத்பாபு, அனுஹாசன், ஃபாத்திமா பாபு, ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சங்கர் எஹெசான் லாய் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

உளவியல் சிக்கலைப் பேசும் இப்படம் கடந்த 2001-ம் ஆண்டு நவ. 15-ம் தேதி வெளியானது. படம் வெளியாகி 22 ஆண்டுகளைக் கடந்த நிலையில் புது பொலிவுடன் டிச. 8-ம் தேதி மறுவெளியீடு செய்யப்பட்டது

விஸ்வாசம்

விஸ்வாசம் (Viswasam) என்பது 2019 ஆம் ஆண்டில் வெளியான  தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் அஜித் குமார்நயன்தாராவிவேக்யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.  ஏற்கனவே அஅஜித் நடித்த வீரம்வேதாளம்விவேகம் ஆகிய திரைப்படங்களை இயக்கிய சிறுத்தை சிவா இப்படத்தை இயக்கினார்.  இத்திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இசையமைத்ததற்காக டி.இமானுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

முத்து

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், மீனா, சரத்பாபு, ராதா ரவி, வடிவேலு, செந்தில் மற்றும் பலர் நடிப்பில் 1995 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் முத்து. ரஜினியின் பிறந்தநாளை ஒட்டி ரீ-ரிலிஸ் செய்யப்பட்டது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட இப்படத்தின் முதல் காட்சிகளை படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் தலைமையிலான படக்குழு கண்டு ரசித்தனர்.

போக்கிரி

போக்கிரி (Pokkiri) திரைப்படம் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும். இத் திரைப்படத்தினைப் பிரபுதேவா இயக்கியுள்ளார். முக்கிய கதாபாத்திரமாக விஜய்அசின் பிரகாஷ் ராஜ்நெப்போலியன்நாசர்வடிவேலு ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியிடப்பட்டது.

இப்படி ரிரீலீஸ் செய்யப்பட்ட  திரையரங்க உரிமையாளர்களுக்கு வசூலை அள்ளி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement