Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நெதன்யாகு கைது செய்யப்படுவாரா? பிரான்ஸ், பெல்ஜியம் அதிரடி முடிவு!

10:02 AM May 22, 2024 IST | Web Editor
Advertisement

நெதன்யாகு மற்றும் ஹமாஸ் தலைவர்களுக்கு எதிரான கைது உத்தரவு பிறப்பிப்பதற்கு பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம், ஸ்லோவாக்கியா ஆகிய ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

Advertisement

காஸா போரில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு,  பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவாவ் கலன்ட், ஹமாஸ் தலைவர்களான யேஹ்யா சின்வர்.  முகமது டெய்ஃப், இஸ்மாயில் ஹனியே ஆகியோர் மனிதகுலத்துக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டிய சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தலைமை வழக்கு அதிகாரி கரீம் கான்,  அனைவருக்கம் எதிராக கைது உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று கடந்த 20ம் தேதி அறிவித்தார்.

இதை இஸ்ரேல் மிகக் கடுமையாகக் கண்டித்தது.  காஸா போர் விவகாரத்தில் தங்கள் தலைவர்களுக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிப்பது,  தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான அடிப்படை உரிமைக்கு எதிரானது என்று இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  இந்நிலையில்,  இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளிகளான பிரான்ஸ், பெல்ஜியம்,  ஸ்லோவாகியா ஆகிய நாடுகள் கைது உத்தரவு தொடர்பான சர்வதேச நீதிமன்ற தலைமை வழக்கு அதிகாரியின் கோரிக்கைக்கு தனித் தனியாக ஆதரவு தெரிவித்துள்ளன.

இதையும் படியுங்கள் : உதகை-மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!

இது குறித்து பிரான்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :

"எந்தவொரு சூழலிலும் கொடூரங்களுக்கு எதிரான போராட்டத்தைத் தொடரும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்.  காஸாவில் பொதுமக்களின் உயிருக்கு பேரிழப்பை ஏற்படுத்தி வரும் சர்வதேச சட்டமீறல்கள் நடைபெறுவது குறித்து பிரான்ஸ் பல மாதங்களாகவே எச்சரித்துவருகிறது"

இவ்வாறு பிரான்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில்,  அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

Tags :
arrest warrantbelgiumFranceInternational CourtNetanyahusupport
Advertisement
Next Article