For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னை காம்தார் நகரை, ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என பெயர் மாற்ற கோரிக்கை... முதலமைச்சர் அலுவலகத்தில் சரண் மனு!

02:18 PM Sep 23, 2024 IST | Web Editor
சென்னை காம்தார் நகரை  ‘எஸ் பி பாலசுப்ரமணியம் நகர்’ என பெயர் மாற்ற கோரிக்கை    முதலமைச்சர் அலுவலகத்தில் சரண் மனு
Advertisement

மறைந்த பாடகர் எஸ்.பி.பி. வாழ்ந்த சென்னை காம்தார் நகரினை, ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என பெயர் மாற்றம் செய்யக் கோரி அவரது மகன் சரண் கோரிக்கை வைத்துள்ளார்.

Advertisement

1966 ஆம் ஆண்டு எஸ்.பி.கோதண்டபாணி இசையமைத்த ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாத ரமணா என்ற தெலுங்கு படத்தின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானவர் எஸ்பி பாலசுப்ரமணியம். இவர் தனது வாழ்நாளில் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என 16 மொழிகளில் 40000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். 6 முறை சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருது, 2001 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது, 2021 ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதும் உள்ளிட்ட பல விருதுகளை வாங்கியுள்ளார்.

ரசிகர்களால் பாடும் நிலா என அழைக்கப்பட்ட எஸ்பிபி கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த 2020ம் உயிரிழந்தார். அவர் மறைந்தாலும் அவரது பாடல்கள் மக்களிடையே ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் எஸ்பிபி வாழ்ந்த காம்தார் நகரை, ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என பெயர் மாற்றம் செய்யக் கோரி அவரது மகன் சரண் முதலமைச்சர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

Tags :
Advertisement