காவல் நிலையத்தில் மழை, வெயிலில் கிடந்து வீணாகும் இரு சக்கர வாகனங்கள்....உரிமையாளர்கள் வேதனை...
காவல் நிலையத்தில் மழை, வெயிலில் நின்று வீணாகி வரும் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்களால், புகாரளிக்க வருபவர்கள் வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் தவிக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் 300க்கும் மேற்பட்ட
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திறந்த வெளியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால்
மழை, வெயிலில் நின்று வீணாகி வருகின்றன. மேலும் புகார் அளிக்க வருபவர்கள் வாகனங்களை நிறுத்த முடியாமல் தவித்து வரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சிவகஙகை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் ரோந்து பணியின்போது உரிய ஆவணங்கள் இன்றி ஓட்டி வரப்பட்ட வாகனங்கள் என சுமார் 300க்கும் மேற்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். இங்கு அவ்வளவு வாகனங்களை நிறுத்த போதிய இட வசதியும் மேற்கூரைகளும் இல்லாததால் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் மழை மற்றும் வெயிலில் நின்று வீணாகி வருகின்றன. ஒன்றுடன் ஒன்று மேலே விழுந்து வாகனங்களின் பாகங்களும் சேதமாகி வருகிறது.
இதனை கண்டால் வருத்தத்திற்குள்ளாகின்றனர். மேலும் இந்த வாகனங்கள் காவல் நிலையம் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளதால் போதுமான இடமின்றி காணப்படுகிறது.