For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ரெப்போ வட்டி விகிதம் 3வது முறையாக குறைப்பு..!

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி (ரெப்போ விகிதம்) 6%ல் இருந்து 5.5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
12:47 PM Jun 06, 2025 IST | Web Editor
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி (ரெப்போ விகிதம்) 6%ல் இருந்து 5.5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
ரெப்போ வட்டி விகிதம் 3வது முறையாக குறைப்பு
Advertisement

வங்கிகளின் குறுகிய காலக் கடனுக்கான வட்டி விகிதம் 0.5 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கிகளுக்கு RBI வழங்கும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6%-ல் இருந்து 5.5% ஆகக் குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Advertisement

ஏற்கனவே இரண்டு முறை தலா 0.25% குறைக்கப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது முறையாக மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பிப்ரவரி, ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களைச் சேர்த்து ரெப்போ வட்டி விகிதம் 1% குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வீடு மற்றும் வாகனக் கடனுக்கான வட்டி விகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்பிஐ ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் நடைபெற்ற இருமாத நாணயக் கொள்கை குழுக் கூட்டத்தில் இந்த முடிவு ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டது. வழக்கமாக 0.25 விழுக்காடு வட்டி விகிதத்தைக் குறைக்கும் ரிசர்வ் வங்கி, இம்முறை 0.50 விழுக்காட்டைக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது, கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement