முதலமைச்சரின் செயலாளர்களின் துறைகள் மாற்றியமைப்பு - திடீர் மாற்றம் ஏன்?
07:36 PM Dec 16, 2024 IST | Web Editor
Advertisement
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயலாளர்களின் துறைகளை மாற்றியமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
Advertisement
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயலாளர்களுக்கான துறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. முதலமைச்சரின் தனிச் செயலாளர் (1) உமாநாத்திற்கு நிதி, மின்சாரம், உள்துறை, நெடுஞ்சாலை, பொதுப்பணி என 17 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சரின் தனிச்செயலாளர் (2) சண்முகத்திற்கு வேளாண்மை, கூட்டுறவு, உயர்கல்வி, மருத்துவம், சட்டம் உள்ளிட்ட 16 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
முதலமைச்சரின் இணைச் செயலாளர் லட்சுமிபதிக்கு சுற்றுசூழல், தகவல் தொழில்நுட்பம், போக்குவரத்து உள்ளிட்ட 12 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
முதலமைச்சரின் செயலாளர் அனு ஜார்ஜ் 136 நாட்கள் விடுப்பில் செல்வதையொட்டி துறைகள் மாற்றப்பட்டுள்ளன.