Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அரசியல் கட்சி கொடி கம்பங்கள் அகற்றல் : ஏப்ரல் 28ம் தேதிக்குள் உறுதிப்படுத்த வேண்டும் - உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!

வருகிற ஏப்ரல் 28 தேதிக்கு முன், பொது இடங்களில் உள்ள அனைத்து அரசியல் கட்சி கொடி கம்பங்களும் அகற்றப்பட்டு உள்ளதா என்பதை தலைமை செயலாளர் நீதிமன்றத்தில் உறுதி படுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
04:26 PM Jan 31, 2025 IST | Web Editor
Advertisement

மதுரை விளாங்குடியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சித்தன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்,

Advertisement

“அதிமுகவின் 53 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு விளாங்குடி பகுதியில் உள்ள அதிமுகவின் பழைய கொடி கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய கொடி கம்பம் அமைக்க அனுமதி வழங்குமாறு மாநகராட்சி அதிகாரிளுக்கு உத்தரவிட வேண்டும்” என மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதே போல மதுரை, பைபாஸ்ரோடு பேருந்து நிறுத்தம் அருகே போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத இடத்தில் அதிமுக கட்சி கொடிக்கம்பம் அமைக்க அனுமதிக்கக் கோரி மதுரை மாடக்குளம் பகுதியை சேர்ந்த பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த்தன.

இந்த மனுக்கள் நீதிபதி இளந்திரையன் முன்பாக ஏற்கனவே விசாரணைக்கு வந்தது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சி மற்றும் இயக்கங்கள், மத ரீதியான அனைத்து கொடிக்கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்.

இந்த நிலையில், இந்த மனுக்கள் மீண்டும், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி இளந்திரையன் முன் பட்டியலிடப்பட்டது. அப்போது, கட்சி கொடி கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும். அவர்களாகவே அகற்றி கொள்ள வேண்டும் என தேதி குறிப்பிடாமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. எனவே வருகிற ஏப்ரல் 28 தேதிக்கு முன் அனைத்து அரசியல் கட்சி கொடி கம்பங்களும் அகற்றப்பட்டு உள்ளதா என்பதை தமிழக தலைமை செயலாளர் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

Tags :
FlagsHighCourt Madurai BenchPARTIESpolitical parties
Advertisement
Next Article