Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நீட் தேர்வரின் பூணூல் அகற்றம் - சாலை மறியலில் ஈடுபட்ட பிராமண சமூகத்தினரால் பரபரப்பு!

நீட் தேர்வரின் பூணூல் அகற்றப்பட்டதால், பிராமண சமூகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
06:16 PM May 04, 2025 IST | Web Editor
Advertisement

தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று(மே.04)  தொடங்கியது. நாடு முழுவதுதிலும் இருந்து சுமார் 22 லட்சம் மாணவ, மாணவியர் இத்தேர்வை எழுதுகின்றனர். தேர்வு மையங்களில் மாணவர்கள் சோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement

இந்த சோதனையின்போது தேர்வர்களின் தாலி, ஹிஜாப் உள்ளிட்ட மத நம்பிக்கை தொடர்புடைய பொருட்கள் அகற்றப்பட்டு அனுமதிக்கப்பட்டு வருவது, நீட் தேர்வு சமயத்தில் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தும்.

இந்த நிலையில் நீட் தேர்வு அனுமதிக்கான சோதனையின்போது பிராமண சமூகத்தை சேர்ந்த மாணவர் ஒருவரின் பூணூல் அகற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கலபுராகி பகுதியில் உள்ள செயிண்ட் மேரி பள்ளி நீட் தேர்வு மையத்தில், ஸ்ரீபாத் பாட்டீல் என்ற மாணவர் நீட் தேர்வு எழுத சென்றபோது பூணூல் அகற்றிவிட்டு தேர்வறைக்குள் செல்ல கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த செயலால் கொதித்த சில பிராமண சமூக மக்கள் அப்பகுதியில் சாலை மறியல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து  சோதனையின்போது பூணூல் அகற்ற சொன்ன அதிகாரிகள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். ஏற்கனெவே அம்மாநிலத்தில் CET நுழைவுத் தேர்வின்போது மாணவர்களிடம் பூணூல் அகற்றப்பட்டதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Tags :
BrahminsJanivaraKarnatakaneet exam
Advertisement
Next Article