வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு நிவாரணம் - ஐசிஎல் ஃபின்கார்ப் நிதி நிறுவனம் வழங்கியது!
சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு ஐசிஎல் ஃபின்கார்ப் நிதி நிறுவனத் தலைவர் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால், சென்னை உள்பட நான்கு மாவட்டப் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகினர். இந்நிலையில், தமிழ்நாடு அரசு மட்டுமன்றி, பல்வேறு தனியார் நிறுவனங்களும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், சென்னை வளசரவாக்கம் பகுதியில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு, இந்திய - கியூபா வர்த்தக ஆணையாளரும் ஐசிஎல் ஃபின்கார்ப் நிதி நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநருமான கே.ஜி. அனில்குமார், அவரது மனைவி உமா தேவி அனில்குமார், மகன் அமல்ஜீத் மேனன் ஆகியோர் நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
இதையும் படியுங்கள் : வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் - தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி.மோகனகிருஷ்ணன் வெற்றி
அப்போது, வளசரவாக்கம் நகராட்சி முன்னாள் தலைவர் மதியழகன், திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஜே. பாலமுருகன், லயன்ஸ் கிளப் ஆலோசகர் மணிலால் மற்றும் நிர்வாகிகளான ஜெயக்குமார், பிரணவ் லால், பி.எம். பால சுப்பிரமணியன், கே. விஜய் ஆனந்த், பாலகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.