செம்பரம்பாக்கத்தில் நீர்திறப்பு 4,000 கன அடிகளாக குறைப்பு! அடையாற்றின் இரு கரைகளையும் தொட்டபடி பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்!
சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 6 ஆயிரம் கன அடியில் இருந்து 4,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் பெய்த கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரி தனது முழு கொள்ளளவான 24 அடி உயரத்தை நெருங்கியுள்ளது. ஏரிக்கு தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக ஏரியில் இருந்து விநாடிக்கு 6,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்நிலையில் ஏரியில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு 4,000 கன அடியாக குறைக்கப்பட்டது. எனினும் அடையாற்றில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அனகாபுத்தூர் உள்ளிட்ட இடங்களில் பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் சீறிப் பாய்ந்து செல்கிறது. ஏற்கனவே பெருமழையால் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ள நிலையில், அடையாற்றில் அதிகளவில் நீர் செல்கிறது.