நடிகர் விக்ரம் பிரபுவின் ‘லவ் மேரேஜ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
கடந்த 2023-ல் வெளியான ‘இறுகப்பற்று’ திரைப்படம் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஹிட் கொடுத்தது. அதே ஆண்டு ‘ரெய்டு’ படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஓராண்டுக்கும் மேலாக அவர் நடிப்பில் எந்தப் படமும் வெளியாகவில்லை. இதற்கிடையே, அவர் அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள ‘Ghaati’ எனும் தெலுங்கு படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : ரூ.5 பார்லே-ஜி பிஸ்கெட் விலை காசாவில் ரூ.2,300… சர்க்கரை, காபி விலை இவ்வளவா?
தொடர்ந்து, அவர் அறிமுக இயக்குநர் ஷண்முக பிரியன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு 'லவ் மேரேஜ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் கதையை 'டாணாக்காரன்' பட இயக்குநர் தமிழ் எழுதியுள்ளார். இதில் சுஸ்மிதா பட், மீனாக்ஷி தினேஷ், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
Here WE go! 💕#LoveMarriage
in theatres worldwide on JUNE 27th 🥳🥁A celebration of love, laughter, family and everything in between 🤗❤️
Directed by @Director_Priyan 🎬
A @RSeanRoldan musical 🎶 @sush_bhat94 @Meenakshidine0 @thilak_ramesh @barathvikraman @madhandop… pic.twitter.com/J4hU3FBMPy— Vikram Prabhu (@iamVikramPrabhu) June 6, 2025
முன்னதாக, இந்தப் படம் கோடை விடுமுறையில் வெளியாகுமென படக்குழு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.