சீரானது செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையேயான ரயில் சேவை...
செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையேயான ரயில் சேவை சீரானது.
செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே இன்று காலை சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு ரயில், செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 10-க்கும் மேற்பட்ட பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் செங்கல்பட்டு வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டது. தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டது. சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழியாக செல்லும் புறநகர் மின்சார ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டது. சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், இதனால் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களும் சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது. தற்போது மீட்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில் ரயில் சேவை சீராகியுள்ளது. செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மின்சார ரயில் சேவை இன்று(திங்கள்கிழமை) மாலை மீண்டும் தொடங்கியுள்ளது.