இத்தாலி அருகே அகதிகள் படகு மூழ்கி விபத்து - 26 பேர் பலி!
லிபியாவில் இருந்து சுமார் 100 பேர் கொண்ட அகதிகள் குழு இரண்டு படகுகளில் பயணித்துள்ளனர். திடீரென ஒரு படகில் நீர் கசியத் தொடங்கியதால் அகதிகள், மற்றொரு படகிற்கு மாறியுள்ளனர். ஆனால், கடல் சீற்றம் காரணமாக இத்தாலியின் தெற்குப் பகுதியில் உள்ள லம்பேடுசா தீவுக்கு அருகே அந்தப் படகு
கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதனைத்தொடர்ந்து இத்தாலிய கடலோர காவல்படையினர் ஐந்து கப்பல்கள், இரண்டு விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 60 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும் 10 பேர் காணவில்லை.உயிர் பிழைத்த அறுபது பேர் லம்பேடுசாவில் உள்ள வரவேற்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.மீதமுள்ள பயணிகளுக்கான மீட்புப் பணிகள் தொடர்கின்றன.
இந்த விபத்தில் இதுவரை 26 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த அதிகரிக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. இத்தாலியில் உள்ள ஐ.நா. அகதிகள் அமைப்பின் (UNHCR) இன் செய்தித் தொடர்பாளர் பிலிப்போ உங்கரோ இந்த துயற சம்பவத்திற்கு இரங்கள் தெரிவித்துள்ளார். UNHCR புள்ளி விவரங்களின்படி, 2025 ஆம் ஆண்டில் இதுவரை, 675 புலம்பெயர்ந்தோர் ஆபத்தான மத்திய மத்தியதரைக் கடலை கடக்க முயன்று இறந்துள்ளனர்