Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

எம்-சாண்டு, பி சாண்டு, ஜல்லி ஆகிவற்றின் விலை குறைப்பு - தமிழ்நாடு அரசு உத்தரவு!

எம்-சாண்டு பி சாண்டு மற்றும் ஐல்லி ஆகியவற்றிக்கு ஏற்றப்பட்ட விலையிலிருந்து ரூ.1000 குறைத்து விற்பனை செய்ய வேண்டும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
04:40 PM Apr 27, 2025 IST | Web Editor
Advertisement

எம்-சாண்டு, பி சாண்டு, ஜல்லி ஆகிவற்றின் விலை குறைப்பு பற்றிய  முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

Advertisement

இது  தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,  “சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (27.04.2025)  நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் கல்குவாரி, கிரஷர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் 25.04.2025 நாளிட்ட மனுவில் தெரிவித்துள்ள கோரிக்கைகள் தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மனுவில் குறிப்பிட்டுள்ள பொருள் குறித்து விவாதிக்கப்பட்டு கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.

அதன்படி, கல்குவாரி. கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் எம்-சாண்டு பி சாண்டு மற்றும் ஐல்லி ஆகியவற்றிக்கு ஏற்றப்பட்ட விலையிலிருந்து ரூ.1000 குறைத்து விற்பனை செய்யப்படும் என சங்கத்தினரால் ஏற்கப்பட்டது.
சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.33 என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கான அரசாணை ஒரு வார காலத்திற்குள் வெளியிடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
GravelLorry Owners Associationm sandP SandTNGovt
Advertisement
Next Article