For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சிவப்பு சிந்தனைவாதி...வெகுஜன மக்களின் #Comrade - யார் இந்த #SitaramYechury?

05:13 PM Sep 12, 2024 IST | Web Editor
சிவப்பு சிந்தனைவாதி   வெகுஜன மக்களின்  comrade   யார் இந்த  sitaramyechury
Advertisement

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான சீதாராம் யெச்சூரில் உடல்நலக் குறைவால் காலமானார். சீதாராம் யெச்சூரி யார்.. அவர் கடந்து வந்த பாதை குறித்து விரிவாக காணலாம்.

Advertisement

இந்திய அரசியலில் மிக முக்கிய தலைவராக அறியப்பட்ட இடதுசாரித் தலைவரான சீதாராம் யெச்சூரி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு அரசியல் கட்சியினர் மற்றும் செயல்பாட்டாளார்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

யார் இந்த சீதாராம் யெச்சூரி..?

  • சீதாராம் யெச்சூரி 1952 ஆகஸ்ட் 12ம் தேதி மெட்ராஸ் மாகாணத்தின் தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தார்.
  • இவரது தந்தை சர்வேஸ்வர சோமயாஜுலா யெச்சூரி மற்றும் தாயார் கல்பகம் யெச்சூரி ஆந்திர மாநிலம் காக்கிநாடாவை பூர்வீகமாக கொண்டவர்கள்
  • ஹைதராபாத்தில் வளர்ந்த அவர் பத்தாம் வகுப்பு வரை ஹைதராபாத்தில் உள்ள ஆல் செயின்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் படித்தார் .
  • CBSE தேர்வில் அகில இந்திய அளவில் முதல் ரேங்க் பெற்ற அவர் டெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்
  • இதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
  • இதனைத் தொடர்ந்து பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற நினைத்த அவரால் அவசர நிலை காலத்தின் காரணமாக ஒரு வருடத்திற்கு மேல் அவரால் தொடர முடியவில்லை.
  • சீதாராம் யெச்சூரி 1970 காலகட்டத்தில் இந்தியர் மாணவர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்
  • 1977-78 காலகட்டத்தில் 3 முறை ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் மாணவர் சங்கத் தலைவராக இருந்தார்
  • 1975ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக சேர்ந்தார்
  • 1978- இந்திய மாணவர் சங்கத்தின் இணைச் செயலாளராக பொறுப்பேற்றார்
  • 2005 - 2017 காலகட்டத்தில் இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராக செயல்பட்டு பல முக்கிய விவாதங்களை மாநிலங்களவையில் முன்வைத்தார்
  • இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய கம்யூனிஸ்ட் தலைவர் என்கிற பெருமை சீதாராம் யெச்சூரிக்கு உண்டு.

  • 2015 முதல் தற்போது வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார்.
  • இந்து ராஷ்டிரா என்றால் என்ன? உலக பொருளாதார சிக்கல்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.
  • 2004-2014 காலகட்டத்தில் நடைபெற்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் முக்கிய பங்காற்றினார்
  • உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சீதாராம் செப்.12 அன்று யெச்சூரி காலமானார்
Tags :
Advertisement