For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாகிஸ்தானில் சிவப்பு கம்பள வரவேற்புகளுக்கு தடை - காரணம் இதுதான்..?

07:34 AM Apr 01, 2024 IST | Web Editor
பாகிஸ்தானில் சிவப்பு கம்பள வரவேற்புகளுக்கு தடை   காரணம் இதுதான்
Advertisement

பாகிஸ்தானில் அரசு நிகழ்ச்சிகளில் சிவப்புக் கம்பளங்களைப் பயன்படுத்துவதற்கு அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

Advertisement

பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பங்கேற்க பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சிக்கு  தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த கட்சியின் வேட்பாளர்கள் சுயேட்சைகளாகப் போட்டியிட்டனர். அவர்கள் அதிக இடங்களைக் கைப்பற்றியிருந்தாலும், ஆட்சியமைப்பதற்குத் தேவையான பலம் இல்லை.

இதையும் படியுங்கள் : 2024-25 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி மாற்றங்கள் – இன்று முதல் அமல்!

இதனைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தலைமையிலான பிஎம்எல்-என் கட்சியும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் புட்டோ ஜர்தாரியின தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் இணைந்து புதிய அரசை அமைத்தன.  அதற்காக, இரு கட்சிகளின் பொது வேட்பாளராக நவாஸ் ஷரீஃபின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீஃப் அறிவிக்கப்பட்டார்.

அவரை எதிர்த்து பிடிஐ கட்சி சார்பில் உமர் அயூப் கான் வேட்புமனு தாக்கல் செய்தார். இதன் பின்னர் மார்ச் 3 நடைபெற்ற வாக்கெடுப்பில் ஷாபாஸ் ஷெரீஃப் வெற்றி பெற்றார். இதையடுத்து, அவர் மார்ச் 4ம் தேதி பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார். இதன் பின்னர் அவர் சில மாற்றங்களை கொண்டுவந்தார்.

இதன் ஒருபகுதியாக அரசு நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கும் நடைமுறைக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தத் தடையை பிரதமர் ஷாபஸ் ஷெரீஃப் பிறப்பித்துள்ளார்.

வெளிநாட்டு தூதரக அதிகாரிகளை வரவேற்பதற்கு மட்டும் இந்தத் தடையிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானில், அரசின் செலவினங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த சிவப்புக் கம்பளத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 13ம் தேதி பதவியேற்றுக் கொண்ட பாகிஸ்தானின் புதிய அதிபரான ஆசிஃப் அலி ஜர்தாரி தனது பதவியேற்பின் போது அரசு வழங்கக்கூடிய ஊதியம் தனக்கு வேண்டாம் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement