Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நீலகிரிக்கு அதிகனமழைக்கான 'ரெட் அலர்ட்' - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

01:08 PM Jul 16, 2024 IST | Web Editor
Advertisement

நீலகிரி மாவட்டத்திற்கு அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது தென்மண்டல வானிலை ஆய்வு மையம். 

Advertisement

ஒடிசா கடலோரம் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் அரபிக்கடலில் நிலவும் சுழற்சி காரணமாக, நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை வலுப்பெற்றுள்ளது. இதற்கிடையே, தென்மேற்கு பருவ காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று நீலகிரி மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நாளை நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தேனி, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை  கொடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

Tags :
Meteorological CentreNilgirisrain alertred alert
Advertisement
Next Article