சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்த ஆட்கொணர்வு மனு! நீதிபதிகள் விலகல்!
சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்த ஆட்கொணர்வு மனு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் தலைமையிலான அமர்வு அறிவித்துள்ளது.
யூ டியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து
அவதூறாக பேசிய வழக்கில் கடந்த 4-ஆம் தேதி தேனி மாவட்டத்தில் கோவை சைபர் க்ரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே, குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி அவரின் தாயர் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில், இன்று விசாரணைக்கு வந்தது.
இதையும் படியுங்கள் : “தியாகத்திற்கு மரணமே இல்லை” – கார்கில் வெற்றி தினத்தில் பிரதமர் மோடி பேச்சு!
அப்போது சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்த ஆட்கொணர்வு மனு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் தலைமையிலான அமர்வு அறிவித்தது. இதையடுத்து வேறு அமர்விற்கு மாற்ற பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளனர்.