Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஹிட்லரை மேற்கோள்காட்டி பதிவு" - சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் விளக்கம்

03:01 PM Nov 26, 2023 IST | Web Editor
Advertisement

இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஹிட்லரை மேற்கோள்காட்டி பதிவிற்கு இஸ்ரேல் தூதரக் கண்டனம் தெரிவித்த நிலையில் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement

சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், இஸ்ரேல் குறித்து முன்பு பதிவு செய்த பதிவை மேற்கோள்காட்டி இஸ்ரேல் தூதரகம் அவருக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் ஹிட்லரை மேற்கொள் காட்டி எக்ஸ் தளத்தில் அவரின் பதிவுக்கு கண்டனத்தை  தெரிவித்துள்ளது. இதற்கு சஞ்சய் ராவத் தனது கருத்து தவறாக பொருள் கொள்ளப்பட்டதாக விளக்கமளித்துள்ளார்.

பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையே போர் தொடங்கிய ஆரம்ப கட்டத்தில் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் தனது எக்ஸ் தளத்தில் காஸா மருத்துவமனையில் நடந்த தாக்குதல் விடியோவைப் பகிர்ந்து 'ஹிட்லர் ஏன் யூதர்களை வெறுத்தார் என இப்போது புரிந்து கொள்ள முடிகிறது'  என  பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இதனை இஸ்ரேல் தூதரகம் கடுமையாக எதிர்த்து கடிதம் அனுப்பியுள்ளது.  இதற்கு விளக்கம் அளித்துள்ள சஞ்சய் ராவத் இஸ்ரேல் ஹமாஸ் போர் நடந்துவரும் வேளையில், தான் தெரிவித்தது குறித்து இஸ்ரேல் தூதரகத்துக்கு வேறு யாரும் இதனை அனுப்பி தன்னை கண்டிக்க சொல்லுமாறு  தூண்டியிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளதாவது..

"இஸ்ரேல் குறித்த எனது பழைய பதிவில் ஹிட்லர் குறித்து குறிப்பிட்டது எந்த விதத்திலும் இஸ்ரேலியர்களின் உணர்வுகளைக் காயப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் அல்ல. நான் அந்தப் பதிவை நீக்கி விட்டேன். இஸ்ரேலில் ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலையும் நான் விமர்சித்துள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும்,  நான அந்த பதிவில் ” மனிதநேய அடிப்படையில்தான் குறிப்பிட்டேன். நீங்கள் மனிதநேயம் காட்டவில்லை என்பதால் கூட ஹிட்லர் உங்களை எதிர்த்திருக்கலாம். இதைதான் நான் சொல்ல வந்தேன்.  அந்த பதிவை எழுதி ஒரு மாதத்திற்கு பிறகு இஸ்ரேல் தூதரகம் கடிதம் அனுப்பியுள்ளது “ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
IsrealIsreal EmbassyPalestinesanjay rautSanjay Rawathshiv senaShiv Sena partyX Post
Advertisement
Next Article