Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“திருமாவளவனின் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

திருமாவளவன் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக இதை எண்ணி பாராட்டுகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
11:33 AM Jan 11, 2025 IST | Web Editor
Advertisement

விடுதலை சிறுத்தைகள் கட்சி, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்று அறிவித்ததுடன் அதற்கு பானை சின்னத்தையும் இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதையடுத்து இந்திய தேர்தல் ஆணையம் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை அளித்துள்ளது.

Advertisement

இந்த நிலையில் மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் கூறியிருப்பதாவது,

"விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன். அன்புச் சகோதரர் திருமாவளவன் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாக இதை எண்ணிப் பாராட்டுகிறேன்". இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Tags :
appreciatesCHIEF MINISTERhard workMKStalinRecognitionthirumavalavan
Advertisement
Next Article