’காங்கோவில் கிளர்ச்சியாளர்களால் பொதுமக்கள் 80 பேர் படுகொலை’
ஆப்ரிக்க நாடான காங்கோவில், ருவாண்டா ஆதரவு பெற்ற M23 கிளர்ச்சிகள் ராணுவத்துடன் மோதி வருகின்றனர். இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் கத்தார் தலைமையிலான அமைதி முயற்சிகள் நடந்து வருகின்றனர். இந்த நிலையில், காங்கோ அதிகாரிகள் சமீபத்திய வாரங்களில் கிளர்ச்சியாளர்களால் 80 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து காங்கோ அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தெற்கு கிவுவில் எம் 23 கிளர்ச்சியாளர்களால் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தொடர் படுகொலைகளை கடுமையாகக் கண்டிக்கிறோம். இதில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி நியாபோரோங்கோ கிராமத்தில் 80 பேரும், ஜூலை 24 ஆம் தேதி லும்பிஷி கிராமத்தில் இரண்டு சிறார் உட்பட ஆறு பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். இந்த படுகொலையில் AFCயின் பங்கும் உண்டு.
மேலும், எம்23 அமைப்பு சிறுவா்களையும் வலுக்கட்டாயமாக தனது படையில் சோ்த்துவருகிறது. தற்போது இந்தப் படுகொலைகளனது கிளர்ச்சியாளர்களையும் நிரந்தர அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைக்கும் கத்தார் கத்தார் தலைமையிலான அமைதி முயற்சிகளை அச்சுறுத்துகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.