Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"முதலமைச்சர் வேட்பாளரை மாற்றினால், மீண்டும் தே.ஜ.கூட்டணியில் இணையத் தயார்”- டிடிவி தினகரன் அதிரடி!

முதலமைச்சர் வேட்பாளரை மாற்றினால் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையத் தயார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
09:30 PM Sep 09, 2025 IST | Web Editor
முதலமைச்சர் வேட்பாளரை மாற்றினால் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையத் தயார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Advertisement

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்  செய்தியாளர்களை சந்தித்தார்.

Advertisement

அப்போது பேசிய அவர்,

”இந்திய குடியரசு துணை தலைவர் தேர்தலில் சி பி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றது தமிழகத்திற்கு பெருமை சேர்க்க கூடிய விஷயம். நேர்மையான நல்ல மனிதர் வெற்றி பெற்றதற்கு  வாழ்த்துக்கள். நயினார் நாகேந்திரனை பொறுத்தவரையில் எனக்கு தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பர். நான் வெளியேறுவதற்கான காரணத்தை அனைத்தையும் ஏற்கனவே சொல்லிவிட்டேன். என்றார்.

டிடிவி தினகரன் மீண்டும் கூட்டணியில் இணைய அழைப்பு விடுப்பதாக நயினார் கூறிய நிலையில் என்னுடைய தொடர்பு நம்பர் அவரிடம் இருப்பதாகவும் அவர் எப்போது வேண்டுமானாலும் என்னிடம் பேசலாம்” என்றும் கூறினார் .

மேலும் அவர், “செங்கோட்டையன் அமித்ஷாவை சந்தித்தது குறித்த கேள்விக்கு அவர் முயற்சிக்கு தனது வாழ்த்துக்கள். அது கண்டிப்பாக வெற்றி பெறும். எந்த துரோகத்திற்காக நாங்கள் கட்சி தொடங்கினோமோ எங்களது தொண்டர்கள் பாதிக்கப்பட்டு கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டோமோ அந்த துரோகத்தை ஏற்றுக் கொண்டு நாங்கள் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. அங்கு இருக்கக்கூடிய நபர்களில் யார் மீதும் கோபம் இல்லை. அங்கு இருக்கக்கூடிய ஒரு நபரையும், அவரை சார்ந்தவர்களையும் தான் நாங்கள் ஏற்கவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரை மாற்றினால், மீண்டும் கூட்டணியில் இணையத் தயார்" lஎன்று தெரிவித்தார்.

Tags :
ADMKlatestNewsndaaliienceTNnewsttvdhinakaran
Advertisement
Next Article