For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பூங்காக்களில் வாசிப்பு மையம்! சென்னை மாநகராட்சியின் புதிய முயற்சி!

12:13 PM Feb 16, 2024 IST | Web Editor
பூங்காக்களில் வாசிப்பு மையம்  சென்னை மாநகராட்சியின் புதிய முயற்சி
Advertisement

புத்தகங்களை எளிதில் மக்களிடையே சேர்க்கவும்,  பொதுமக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கவும் வடசென்னையில் உள்ள பூங்காக்களில் வாசிப்பு மையங்களில் பெருநகர சென்னை மாநகராட்சியால் அறிமுகப்படுத்தப்பட்டது.

Advertisement

பொதுமக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பூங்காக்களில் புத்தகங்கள் வைக்கப்பட்ட வாசிப்பு மையம் அமைத்திட சென்னை மாநகராட்சி திட்டமிடப்பட்டுள்ளது.  இதனைத் தொடர்ந்து, முதற்கட்டமாக 10 பூங்காக்களில் புத்தக வாசிப்பு மையம் அமைத்திட திட்டமிடப்பட்டது.

அதில் முன்னோட்ட அடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சி வடக்கு வட்டாரம், ராயபுரம் மண்டலம் வார்டு-58, சூளை,  உ.பி.சாலையில் உள்ள ராகவேந்திரா பூங்காவில் புத்தகங்கள் வைக்கப்பட்ட வாசிப்பு மையத்தினை வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா பிப். 14 ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மண்டலக்குழுத் தலைவர் பி ஸ்ரீராமுலு. மாமன்ற உறுப்பினர்  ஸ்ரீஇராஜேஸ்வரி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்கள் : தாதாசாகேப் பால்கே நினைவு தினம் | யார் இவர்?... இவர் பெயரில் விருது வழங்கப்படுவது ஏன்? ...

"பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்ப்பது.  குடிசைப்பகுதிகள் அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள குழந்தைகள் எளிதில் அணுகி புத்தகங்கணைப் படிப்பது.  மகளிர் கல்வியறிவினை மேம்படுத்துதல் உள்ளிட்ட சிறந்த நோக்கங்களுடன் பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காக்களில் புத்தகங்கள் வைக்கப்பட்ட வாசிப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளது.

இந்த வாசிப்பு மையங்களில் சிறுகதைகள்,  வாழ்க்கை வரலாறுகள்,  நாவல்கள் போன்ற பல்வேறு வகையான புத்தகங்கள் உள்ளன. இந்தப் புத்தகங்களை பொதுமக்கள் இலவசமாகப் படித்து பயன்பெறலாம். இந்த வாசிப்பு மையங்களில் பயனர்கள் தாங்கள் படித்த புத்தகத்தின் விவரங்களையும். இந்தத் திட்டம் குறித்த தங்கள் கருத்துக்களையும் இங்கு வைக்கப்பட்டுள்ள பதிவேட்டில் பதிவு செய்யலாம். புத்தகங்களைப் படித்த பிறகு அதை மீண்டும் பெட்டியில் வைக்க வேண்டும்.

இதையடுத்து,  இந்த முயற்சியானது வடசென்னை பகுதியில் உள்ள திருவொற்றியூர் மண்டலம் வார்டு-5ல் எம்.ஆர்.எப். பூங்கா, வார்டு-10ல் பூந்தோட்டம் சென்னை தொடக்கப்பள்ளி அருகில் உள்ள பூங்கா,  உள்ளிட்ட 10 பூங்காக்களில் புத்தக வாசிப்பு மையம் முன்னோடியாக செயல்படுத்த திட்டமிடப்பட்டு அதில் முதற்கட்டமாக ராயபுரம் மண்டலம் வார்டு-58ல் உள்ள ராகவேந்திரா பூங்காவில் புத்தகம் வைக்கப்பட்ட வாசிப்பு மையம் பிப். 15 ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது.

பயனர்களின் கருத்துகளின் அடிப்படையில் இந்த வசதியை மேம்படுத்தி சென்னையின் மற்ற பூங்காக்களுக்கும் விரிவுபடுத்தப்படும். எதிர்காலத்தில், பூங்காக்களில் புத்தக விவாதங்களை நடத்தி, மேலும் படிக்கும் மகிழ்ச்சியை பரப்பக்கூடிய வாசகர்களின் சமூகத்தை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த திட்டத்திற்கு புத்தகங்களை வழங்க விரும்பும் பொதுமக்கள் நேரடியாக பூங்காக்களில் உள்ள வாசிப்பு மண்டலப் பெட்டியில் வைக்கலாம் அல்லது வடக்கு வட்டார துணை ஆணையாளர்,  எண்.61, பேசின் பிரிட்ஜ் சாலை, பழைய வண்ணாரப்பேட்டை சென்னை.21 என்ற முகவரியிலும் வழங்கலாம். மேலும், விவரங்களுக்கு 044 2620 0025 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" என தெரிவித்துக்பட்டுள்ளது.

Tags :
Advertisement