RCBvsRR | டாஸ் வென்ற ராஜஸ்தான் - பெங்களூர் அணி பேட்டிங்!
நடப்பாண்டு ஐபிஎல் லீக் சுற்று நடைபெற்று வரும் நிலையில், ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூர் அணி இதுவரை 8 போட்டிகளில் பங்கேற்று 5-ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அதே போல் ராஜஸ்தான் அணி 8 போட்டிகளில் பங்கேற்று 2-ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று(ஏப்ரல்.24) சின்னசுவாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான டாஸை வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
பெங்களூர் அணியில் சார்பில் விராட் கோலி, ஃபில் சால்ட், தேவதத் படிக்கல், ரஜத் படிதார், ஜிதேஷ் சர்மா, ரொமாரியோ ஷெப்பர்ட், டிம் டேவிட், க்ருணால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள் ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.
ராஜஸ்தான் அணி பிளேயிங் லெவனில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், நிதிஷ் ராணா, ரியான் பராக், துருவ் ஜூரெல், ஷிம்ரான் ஹெட்மயர், சுபம் துபே, வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.