For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வெற்றிக் கணக்கை தொடங்கியது ஆர்சிபி - பஞ்சாபை வீழ்த்தி த்ரில் வெற்றி

07:00 AM Mar 26, 2024 IST | Jeni
வெற்றிக் கணக்கை தொடங்கியது ஆர்சிபி   பஞ்சாபை வீழ்த்தி த்ரில் வெற்றி
Advertisement

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி த்ரில் வெற்றி பெற்றது.

Advertisement

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி, பஞ்சாப், குஜராத், லக்னோ, ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று (மார்ச் 25) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் பஞ்சாப் கிங்க்ஸ் அணி மோதியது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கி விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணி தரப்பில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 45 ரன்கள் விளாசினார்.இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அணியின் மற்ற வீரர்கள் குறைவான ரன்களில் வெளியேற, விராட் கோலி பொறுப்புடன் விளையாடினார். 49 பந்துகளில் 77 ரன்கள் விளாசிய விராட், ஹர்ஷல் பட்டேல் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

இதையும் படியுங்கள் : சிஎஸ்கே போட்டியை நேரில் பாக்க போறீங்களா?.. மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்!

ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் கைகோர்த்த தினேஷ் கார்த்திக் மற்றும் இம்பேக்ட் பிளேயராக வந்த லோம்ரோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பவுண்டரி, சிக்ஸ் என விளாசிய இந்த ஜோடி, அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. இறுதியாக 19.2 ஓவர்களில் இலக்கை எட்டிய பெங்களூரு அணி த்ரில் வெற்றி பெற்றது. 77 ரன்கள் விளாசிய விராட் கோலி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Tags :
Advertisement