ஆர்.பி.ஐ. ஆளூநர் கையொப்பத்துடன் புதிய ரூ.20 நோட்டுகள் வெளியீடு!
இந்திய ரிசர்வ் வங்கி(RBI) அண்மையில் அதன் புதிய ஆளுநர் ஸ்ரீ சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பத்துடன் கூடிய புதிய 20 ரூபாய் நோட்டுகளை வெளியிடவுள்ளதாக அறிவித்தது. அதாவது ஏற்கெனவே இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில் பின்புறத்தில் எல்லோரா குகைகளுடம் அச்சிடப்பட்டு புதிதாக வெளியிடப்பட்ட பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் உள்ள 20 ரூபாய் நோட்டுகளில் இந்த மாற்றம் செய்வதாக அறிவித்தது.
இந்த நிலையில் இன்று(மே.17) அவரின் கையொப்பம் அச்சிடப்பட்ட புதிய 20 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள புதிய வகை 20 ரூபாய் நோட்டுகளில் இருந்து ஆளுநரின் கையோப்பத்தை தவிர வேறு எந்த மாற்றமுமின்றி இந்த 20 ரூபாய் நோட்டுகள் வெளியாகியுள்ளன.
இதனால் ஏற்கெனவே வெளியான 20 ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாவதில் எந்த மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. சஞ்சய் மல்ஹோத்ரா இந்திய ரிசர்வ் வங்கியின் 26வது ஆளுநராக கடந்தாண்டு டிசம்பரில் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.