Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

90 வருட பயணத்தை நிறைவு செய்த ரிசர்வ் வங்கி | வெப் தொடர் ஒன்றை வெளியிடத் திட்டம்!

07:15 AM Jul 31, 2024 IST | Web Editor
Advertisement

ரிசர்வ் வங்கியின் 90 ஆண்டுகால பயணத்தை நினைவுகூரும் வகையில், அதன் பயணத்தைப் பற்றிய விரிவான காட்சியை வழங்க ஐந்து எபிசோடுகளை கொண்ட வெப் தொடரை வெளியிட திட்டமிட்டுள்ளது. 

Advertisement

1935-ல் தொடங்கப்பட்ட ரிசர்வ் வங்கி, இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் 90 ஆண்டுகளை நிறைவு செய்தது.  நாட்டின் செலாவணிக்குரிய நாணயத்தை வெளியிடுவதோடு, நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி இயக்கியும் வருகிறது. பொதுமக்கள் மற்ற வங்கிகளை பயன்படுத்துவதுபோல ரிசர்வ் வங்கியை பயன்படுத்த முடியாது.

ரிசர்வ் வங்கியை பொதுமக்கள் நேரடியாகப் பயன்படுத்தாவிட்டாலும், அனைத்து வங்கிகளையும் கண்காணித்து வருகிறது. முதலில் கொல்கத்தா நகரை தலைமையகமாக கொண்டு இயங்கிய இவ்வங்கி 1937-ம் ஆண்டு முதல் மும்பையை தலைமையகமாக கொண்டுள்ளது. ரிசர்வ் வங்கிக்கு இந்தியா முழுவதும் 22 கிளைகள் உள்ளன.

1935-ல் தொடங்கப்பட்ட ரிசர்வ் வங்கி, இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் 90 ஆண்டுகளை நிறைவு செய்தது.ரிசர்வ் வங்கிக்கு இந்தியா முழுவதும் 22 கிளைகள் உள்ளன.ரிசர்வ் வங்கியின் 90 ஆண்டுகால பயணத்தை நினைவுகூரும் வகையில், அதன் பயணத்தைப் பற்றிய விரிவான காட்சியை வழங்க ஐந்து எபிசோடுகளை கொண்ட வெப் தொடரை வெளியிட திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில், ஒவ்வொரு எபிசோடும் 25-30 நிமிடங்கள் கொண்டதாக இருக்கும். இந்த வெப் தொடர் கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தேசிய தொலைக்காட்சி சேனல்கள் அல்லது ஓ.டி.டி. தளங்களில் ஒளிபரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதாரத்தில் மத்திய வங்கியின் முக்கிய பங்கு பற்றிய பொது புரிதலை மேம்படுத்த, அதன் செயல்பாடுகள் மற்றும் கொள்கைகளின் மீது நம்பிக்கையை வளர்ப்பதற்கும் இந்த தொடரை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

Tags :
RBIWeb Series
Advertisement
Next Article