பிக் பாஸ் வீட்டிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்ட ரவீந்தர் - காரணம் என்ன?
விதிகளை மீறியதால் ரவீந்தர் பிக் பாஸ் வீட்டிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் சற்று நாட்களில் முடிவடைய உள்ளது. சென்ற வாரம் போட்டியாளர் ரயான் டிக்கெட் டு பினாலேவில் வெற்றி பெற்று இறுதி சுற்றுக்குள் நேரடியாக நுழைந்தார். அதனை தொடர்ந்து கடந்த வாரம் போட்டியாளர் மஞ்சரி நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் வீட்டிற்குள் தற்போது சௌந்தர்யா, முத்துகுமரன், பவித்ரா, தீபக், விஷால், அருண், ரயான் மற்றும் ஜாக்லின் உள்ளிடோர் உள்ளனர்.
நிகழ்ச்சியின் சுவாரஷ்யத்தை அதிகரிப்பதற்காக வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வரவழைக்கப்பட்டனர். இந்த நிலையில் வெளியேற்றப்பட்ட போட்டியாளரான ரவீந்தரும் வீட்டிற்குள் நுழைந்தார்.
இதன் புரோமோ இன்று (ஜனவரி 9) வெளியானது. இந்த புரோமோவில் வெளியேற்றப்பட்ட போட்டியாளரான ரவீந்தர், தற்போது போட்டியாளராக உள்ள ரயான் மற்றும் தீபக்கிடம் வெளியே உள்ள மக்களின் கருத்துக்களை பகிர்ந்தார். இப்படி மக்களின் கருத்துக்களை வீட்டிற்க்குள் வந்து பகிர்வது பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிகளுக்கு அப்பார்ப்பட்டது.
இந்த விதியை மீறியதால் வெளியேற்றப்பட்ட போட்டியாளர் ரவீந்தரனை பிக்பாஸ் கன்பெஷன் அறைக்கு அழைத்து அவரை கண்டித்தார். மேலும், அவர் உடனடியாக வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவதாக அறிவித்தார். இதனால் அவர் மனமுடைந்து அழ தொடங்கினார். இந்த காட்சியானது சமூக வலைதலங்களில் தீயாக பரவி வருகிறது.