ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடம்!
ஐசிசி ஆண்கள் டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் இந்தியாவின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் புதன்கிழமை தனது 100 வது டெஸ்ட் போட்டியை ஒன்பது விக்கெட்டுகளுடன் முடித்த பின்னர் முதலிடத்தை மீண்டும் பிடித்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் தனது 100வது டெஸ்ட் போட்டியை விளையாடினார் தமிழகத்தைச் சேர்ந்த ரவி அஸ்வின். இந்தப் போட்டியில் (4+5) 9 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
இந்தியாவில் அதிகமுறை 5 விக்கெட்டுகள் எடுத்தவர் வரிசையில் முதலிடம் பிடித்துள்ள அஸ்வின், உலக அளவில் ஆர்ஜெ ஆர்ட்லியுடன்,36 மூன்றாம் இடத்தில் இருக்கிறார். முதலிடத்தில் முரளிதரன், 67, இரண்டாம் இடத்தில் ஷேன் வார்னே, 37 இருக்கிறார்கள். இன்னும் ஒரு டெஸ்ட் போட்டி விளையாடினால் அஸ்வின் வார்னேவின் இடத்தினைப் பிடிக்க அதிகம் வாய்ப்புள்ளது.
🇮🇳 🔁 🇮🇳
A new No.1 bowler has been crowned in the ICC Men's Test Player Rankings after the #INDvENG series 🎖
— ICC (@ICC) March 13, 2024
இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸை 13வது முறையாக வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஐசிசி பௌலிங் டெஸ்ட் தரவரிசையில் 870 புள்ளிகளுடன் அஸ்வின் முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஹேசில்வுட்டும் மூன்றாவது இடத்தில் இந்திய வீரர் ஜஸ்ப்ரீத் பும்ராவும் இருக்கிறார்.