Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ரவி மோகனின் 34வது திரைப்படம் - Title மற்றும் Teaser நாளை வெளியாகிறது!

ரவி மோகன் நடிப்பில் உருவாகி வரும் RM34 திரைப்படத்தின் டீசர் மற்றும் டைட்டில் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது
02:28 PM Jan 28, 2025 IST | Web Editor
featuredImage featuredImage
Advertisement

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான சைரன், இறைவன், பிரதர் உள்ளிட்ட  திரைப்படங்கள் சிறப்பான விமர்சனங்களைப் பெற்றன. இதனைத் தொடர்ந்து, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement

பெண் இயக்குநர் இயக்கிய இத்திரைப்படம் தனக்கு சிறந்த அனுபவத்தை கொடுத்ததாகவும் வழக்கமான நடிப்பில் இருந்து மாற்றத்தை உணரந்ததாகவும் ஜெயம் ரவி தெரிவித்தார். அதேபோல இனிமேல் தன்னை யாரும் ஜெயம் ரவி என அழைக்க வேண்டாம் எனவும், ரவி மோகன் என்றோ அல்லது மோகன் ரவி என்றோ அழைக்குமாறு அனைவரிடமும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து ரவி மோகன் தனது 34வது படத்தில் நடித்து வருகிறார் இப்படத்திற்கு தற்காலிகமாக JR 34 என பெயரிடப்பட்டுள்ளது. இதனை ‘டாடா’ படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இயக்கவுள்ளார். இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இப்படத்திற்கு கூடுதல் திரைக்கதையை இயக்குனர் ரத்னம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில் ரவி மோகனின் 34வது திரைப்படத்தின் டைட்டில் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டைட்டில் அறிவிப்போடு சேர்த்து டீசரும் வெளியாகும் எனத் தெரிவித்த படக்குழு நாளை காலை 11மணிக்கு வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.

Tags :
Dada Film DirectorRavi MohanRM 34Teasertitle
Advertisement