ரதசப்தமி உற்சவம் - சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளினார் உற்சவர் மலையப்ப சுவாமி!
08:04 AM Feb 16, 2024 IST
|
Web Editor
தொடர்ந்து நடத்தப்பட்ட தீப தூப நைவேத்தியங்களுக்கு பின் கோவில் மாட வீதிகளில்
பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கிடையே அதிகாலை முதல் ஏழுமலையானின் சூரிய பிரபை வாகன சேவை நடைபெற்றது. அப்போது மாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர்.
Advertisement
திருப்பதி ரதசப்தமி உற்சவத்தின் ஒருபகுதியாக சூரிய பிரபை வாகனத்தில் உற்சவர் மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.
Advertisement
ரதசப்தமி உற்சவத்தின் முதல் வாகன புறப்பாடாக மலையப்ப சுவாமியின் சூரிய பிரபை
வாகன புறப்பாடு இன்று காலை திருப்பதி மலையில் நடைபெற்றது. சூரிய பிரபை வாகன புறப்பாட்டை முன்னிட்டு கோவிலிலிருந்து எழுந்தருளிய உற்சவர் மலையப்ப சுவாமி வாகன மண்டபத்தை அடைந்து சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளினார்.
பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கிடையே அதிகாலை முதல் ஏழுமலையானின் சூரிய பிரபை வாகன சேவை நடைபெற்றது. அப்போது மாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர்.
தட்ஷிணாயன காலம் முடிந்து உத்தராயன காலம் துவங்கி உள்ள நிலையில் உத்தராயன
காலத்தில் இன்று சூரிய பகவான் வடதிசை நோக்கி தன்னுடைய பயணத்தை துவங்கும் நாள் ஆகும். இன்றைய நாளை சூரிய ஜெயந்தி நாள் என்றும் கூறுவார்கள்.
Next Article