For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“#RatanTata ஒரு ஜென்டில்மேன்...”என புகழ்ந்த எலான் மஸ்க்! 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வீடியோ வைரல்!

04:13 PM Aug 29, 2024 IST | Web Editor
“ ratantata ஒரு ஜென்டில்மேன்   ”என புகழ்ந்த எலான் மஸ்க்  15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வீடியோ வைரல்
Advertisement

எலான் மஸ்க் ஒருமுறை ரத்தன் டாடாவை ஜென்டில்மேன் மற்றும் அறிஞர் என ஒரு பழைய பேட்டியில் புகழ்ந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

எலக்ட்ரிக் ஆட்டோமொபைல் நிறுவனமான டெஸ்லாவின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் 2009-ம் ஆண்டு அமெரிக்க பத்திரிகையாளர் சார்லி ரோஸுடன் நேர்காணலில் ஈடுபட்டார். அப்போது அவர் டாடா குழும நிறுவனரான ரத்தன் டாடா மற்றும் அவருக்கு மிகவும் விருப்பமான திட்டமான டாடா நானோ கார் பற்றிய தனது கருத்தைப் பகிர்ந்து கொண்டார். அந்த முழு பேட்டியில் ஒரு சிறிய கிளிப் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் ரூ.1 லட்சத்திற்கு நானோவை அறிமுகப்படுத்திய சில மாதங்களுக்குப் பிறகு நேர்காணல் நடந்தது. ​சார்லி ரோஸ் அந்த நேர்காணலில், ​எலான் மஸ்க்கிடம் இந்திய சந்தையில் குறைந்த விலை காரை அறிமுகப்படுத்தும் ரத்தன் டாடாவின் யோசனை பற்றி கேட்டார். ரத்தன் டாடா, இந்தியாவில் 2300 அமெரிக்க டாலருக்கு ஒரு சிறிய செடான் வடிவ காரை உருவாக்குகிறார். கார்களின் எதிர்காலம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? என சார்லி ரோஸ் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த எலான் மஸ்க், “இன்று உலகின் மிகப் பெரிய பணக்காரர் ரத்தன் டாடா” என ஆரம்பித்த அவர், டாடா நானோ குறித்த சந்தேகங்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது, “மலிவு விலையில் கார்களை உற்பத்தி செய்வது நல்ல யோசனை என்று நான் நினைக்கிறேன். ஆனால் நானோ போன்றவை பிரச்னை என்றும் நினைக்கிறேன். நான் அதைச் சொல்ல மாட்டேன். ஏனென்றால் இது ஒரு சிறந்த யோசனை. ரத்தன் டாடா ஒரு ஜென்டில்மேன். ஒரு அறிஞர். எதிர்காலத்தில் இது சவாலானதாக மாறப் போகிறது" என்று விளக்கினார்.

டாடா நானோவின் தோல்வியைப் பற்றி விவாதிக்கும் பெரிய தொடரின் ஒரு பகுதி வீடியோ இந்த வார தொடக்கத்தில் சமூகவலைதளத்தில் வைரலானது. டாடா நானோ கார் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு பல தடைகளை அந்நிறுவனம் எதிர்கொண்டது. டாடா நானோ உலகின் மிகப்பெரிய சந்தைப்படுத்தல் தோல்விகளில் ஒன்றாக அழைக்கப்படுகிறது.

இந்த கார் மிகவும் வயது குறைந்த ஜப்பானிய பொறியாளர்களால் வடிவமைக்கப்பட்டது. ரத்தன் டாடா ஒரு நேர்காணலில், “டாடா நேனோ காரின் தோல்விக்கு, நானும் டாடா நிறுவனத்தில் விற்பனை நிர்வாகிகளுமே பொறுப்பு. இந்த கார் நடுநிலையான குடும்பங்களுக்கு சென்று சேர்ப்பதே எங்கள் நோக்கமாக இருந்தது. ஒரு குடும்பத்தில் பெற்றோர்கள் மற்றும் அவர்களது 2 பிள்ளைகள் என 4 பேர் இருசக்கர வாகனத்தில் செல்லும் சூழல் இந்தியாவில் அதிகம் உள்ளது. இந்த நிலையை சரிசெய்யவே மலிவு விலையில் செடான் வகை காரை அறிமுகம் செய்ய திட்டமிட்டோம்.

ஆனால் இந்த காருடன் ஒப்பிட்டு மற்ற காரை விற்பனை நிர்வாகிகள் விற்பனை செய்ய தொடங்கினர். எனவே இந்த கார் எதிர்பாராத தோல்வியை கண்டது. எங்கள் நோக்கத்தில் நாங்கள் தோல்வியை கண்டோம்” என வெளிப்படையாக தெரிவித்தார்.

Tags :
Advertisement