For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#RatanTata | தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நிலை கவலைக்கிடம் - மருத்துவமனையில் அனுமதி!

09:34 PM Oct 09, 2024 IST | Web Editor
 ratantata   தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நிலை கவலைக்கிடம்   மருத்துவமனையில் அனுமதி
Advertisement

டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் மாபெரும் மாற்றம் ஏற்படுத்திய தொழிலதிபரான ரத்தன் டாடா, பத்மபூஷண், பத்மவிபூஷன், நற்பணிகளுக்கான கார்னகி பதக்கம், சிங்கப்பூர் அரசு வழங்கிய கவுரவக் குடிமகன் அந்தஸ்து, பிரிட்டிஷ் அரசின் ஹானரரி நைட் கமாண்டர் ஆஃப் பிரிட்டிஷ் எம்பயர் ஆகிய கவுரவங்களைப் பெற்றவர். டைம் இதழ் வெளியிட்ட உலகின் செல்வாக்கு படைத்த 100 பேர் பட்டியல் மற்றும் உலகின் சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில் இடம்பெற்றவர்.

டாடா குழும தலைவர் பதவியில் 21 ஆண்டு இருந்து, கடந்த 2012-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். பின்னர், டாடா குழும அறக்கட்டளைகளின் தலைவராக இருந்து வழிநடத்தி வந்தார். கடந்த அக். 6-ம் தேதி ரத்தன் டாடா (86) மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்தத் தகவலுக்கு ரத்தன் டாடா மறுப்பு தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் நேற்று முன்தினம் (அக். 8) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “எனது உடல்நிலை குறித்து சமீபத்தில் வெளியான வதந்தி குறித்து நான் அறிவேன். அது முற்றிலும் ஆதாரமற்றவை என அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். கவலைகொள்ள வேண்டாம். நான் சிறந்த மனநிலையுடன் உள்ளேன். எனது வயது காரணமாக மேற்கொள்ளப்பட்ட வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்து கொண்டேன்” என விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது அவர் மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவான ஐசியு-வில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை.

Tags :
Advertisement