For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#TATA அறக்கட்டளை தலைவராக, நோயல் டாடா நியமனம்!

02:19 PM Oct 11, 2024 IST | Web Editor
 tata அறக்கட்டளை தலைவராக  நோயல் டாடா நியமனம்
Advertisement

டாடா அறக்கட்டளையின் புதிய தலைவராக நோயல் டாடா நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

Advertisement

டாடா ஸ்டீல்ஸ், டாடா பவர், டாடா மோட்டார்ஸ், டாடா கெமிக்கல் என ஏகப்பட்ட நிறுவனங்கள் டாடா குழுமத்தில் இருக்க, ரத்தன் டாடா 'உலக பணக்கார பட்டியலில்' இடம்பெறாததற்கு முக்கிய காரணம் அவரது 'சமூக உணர்வு'.

வெள்ளம் தொடங்கி கொரோனா வரை எந்த பேரிடர் வந்தாலும், டாடா குழுமத்தின் உதவி இல்லாமல் இருக்கவே இருக்காது. இந்த உதவிகள் 'டாடா அறக்கட்டளை' மூலம் நடந்தேறி வருகிறது. டாடா குழுமத்தில் பல அறக்கட்டளைகள் இருக்கின்றன. டாடா சன்ஸ் நிறுவனத்தின் குறிப்பிட்ட பங்குங்கள் இந்த அறக்கட்டளையுடையது... அந்தப் பங்குகளை வைத்து தான் இந்த அறக்கட்டளைகள் செயல்படுகின்றன. இதற்கு, சர் டோராப்ஜி டாடா அறக்கட்டளை, சர் ரத்தன் டாடா அறக்கட்டளை ஆகிய இரண்டு அறக்கட்டளைகள் மட்டும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் 52 சதவிகித பங்குகளை வைத்துள்ளன.

இதுவரை இந்த அறக்கட்டளைகளின் தலைவராக ரத்தன் டாடா இருந்தார். 'தனக்கு பின் யார்?' என்று அவர் யாரையும் குறிப்பிடாததால், தற்போது அந்த நபரை டாடா அறக்கட்டளையின் 13 அறங்காவலர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

2022-ம் ஆண்டு டாடா குழுமத்தில், டாடா சன்ஸ் தலைவர், டாடா அறக்கட்டளைகள் தலைவர் என இரு பதவியாக பிரிக்கப்பட்டது. அதற்கு முன்பு வரை, ஒருவரே கூட இரு பதவிகளிலும் இருக்கலாம். அப்படி இருந்த கடைசி தலைவர் ரத்தன் டாடா தான். 2017-ம் ஆண்டு ரத்தன் டாடா தனது ஓய்வை அறிவிப்பதற்கு முன்பு வரை, அவர் தான் இரண்டிலுமே தலைவராக இருந்தார். ஆனால், அந்த அறிவிப்புக்கு பிறகு, தமிழ்நாட்டை சேர்ந்த சந்திரசேகரன் டாடா சன்ஸின் தலைவராக ஆனார். ரத்தன் டாடா அறக்கட்டளையில் மட்டும் தலைவராக தொடர்ந்தார்.

2022-ம் ஆண்டு எடுக்கப்பட்ட முடிவின் படி, தற்போது சந்திரசேகரனே டாடா சன்ஸின் தலைவராக தொடர்வார். டாடா அறக்கட்டளையின் தலைவர் பதவிக்கு மட்டும் வேறோரு நபர் பொறுப்பேற்பார். இதுவரை, டாடா அறக்கட்டளையின் தலைவராக இருந்தவர்கள் டாடா குடும்பத்தை சேர்ந்தவர்களாக மட்டுமே இருந்திருக்கிறார்கள். அதன்படி டாடா அறக்கட்டளைக்கு புதிய தலைவராக நோயல் டாடா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Tags :
Advertisement