ராஷ்மிகா போலி வீடியோ விவகாரம் - 19 வயது பீகார் இளைஞரிடம் போலீசார் விசாரணை
ராஷ்மிகா போலி வீடியோ விவகாரம் தொடர்பாக 19 வயது பீகார் இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்னிந்திய சினிமாக்களில் முன்னணி நடிகையான வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனதா. இவர் தொடர்பான காணொலி ஒன்று சமீபத்தில் வைரலானது. அந்தக் காணொலியில் நடிகை ராஷ்மிகா போன்ற தோற்றம் கொண்ட நபர், லிப்ட்டுக்குள் இருந்து வெளியே வருவது போன்று காணப்பட்டது. மேலும் அந்தக் காட்சி ஆபாசமாக காணப்பட்டது.
இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் காணொலியில் தோன்றும் நபர் இங்கிலாந்தை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண்மணி என்பது தெரியவந்தது.
இதுகுறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா, “இந்தக் காணொலி மன உளைச்சலை ஏற்படுத்தியது. இருப்பினும் நான் ஸ்கூல் பொண்ணு அல்ல; நான் ஒரு நடிகை என்னால் இதனை எதிர்கொள்ள முடிகிறது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பீகார மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இவர்தான் மார்பிங் காணொலியை முதன்முதலில் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தவர் ஆவார்.