For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தோ்தல் செலவின விவரங்களில் முரண்பாடு - பாராமுல்லா தொகுதி எம்பி ரஷீத் பதிலளிக்க 2 நாட்கள் அவகாசம்!

07:49 AM Jul 04, 2024 IST | Web Editor
தோ்தல் செலவின விவரங்களில் முரண்பாடு   பாராமுல்லா தொகுதி எம்பி ரஷீத் பதிலளிக்க 2 நாட்கள் அவகாசம்
Advertisement

சிறையில் உள்ள  பாராமுல்லா தொகுதி எம்.பி. ஷேக் அப்துல் ரஷீத்தின் தோ்தல் செலவின தகவலில் முரண்பாடு இருப்பதாக அவருக்கு  தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Advertisement

நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 234 தொகுதிகளையும் கைப்பற்றியது. இதனையடுத்து கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றார்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா தொகுதியில் போட்டியிட்ட தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சருமான ஒமர் அப்துல்லா தோல்வி அடைந்தார். இவரை எதிர்த்து NIA-வால் குற்றம் சாட்டப்பட்டு 2019 முதல் சிறையில் இருக்கும் ரஷீத், சுயேட்சையாக போட்டியிட்டு சுமார் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று கவனம் ஈர்த்தார்.

இதையும் படியுங்கள் : வேதாரண்யம் அருகே காமாட்சி அம்மன் கோயில் தீமிதி திருவிழா – பக்தர்கள் விரதமிருந்து தீமிதித்து நேர்த்திகடன்!

இதைத்தொடா்ந்து அவர் எம்பி.யாக ஜூலை 5ம் தேதி பதவியேற்க 2 மணி நேரம் பரோல் அளித்து டெல்லி நீதிமன்றம் கடந்த 2ம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில், ரஷீத்தின் தேர்தல் செலவின தகவலில் முரண்பாடு உள்ளதாக அவருக்கு பாரமுல்லா துணை மாவட்ட தேர்தல் அதிகாரி ஜூலை 2 ம் தேதி நோட்டீஸ் அனுப்பினார்.மேலும், வரும் 5-ஆம் தேதி எம்.பி.யாக பதிவியேற்க அவருக்கு நீதிமன்றம் 2 மணி நேரம் பரோல் அளித்துள்ள நிலையில், 2 நாட்களில் நோட்டீஸுக்கு பதிலளிக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது.

அந்த நோட்டீஸில் தெரிவித்திருப்பதாவது :

"தேர்தலின்போது ரஷீத் ரூ.2.10 லட்சம் மட்டுமே செலவிட்டதாக அவரின் தோ்தல் செலவின பதிவேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தோ்தல் பார்வையாளர்கள் பராமரிக்கும் பதிவேட்டில் தேர்தலின்போது ரஷீத் ரூ.13.78 லட்சம் செலவிட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முரண்பாடு குறித்து மாவட்ட தேர்தல் செலவின கண்காணிப்பு குழு முன்பாக ரஷீத் அல்லது அவரின் பிரதிநிதி 2 நாட்களில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும். தோ்தல் ஆணையத்திடம் உரிய காலத்தில் தனது தேர்தல் செலவின அறிக்கையை ரஷீத் சமர்ப்பிக்க வேண்டும். தேர்தல் செலவினம் தொடர்பான தகவல்களை வழங்க மறுத்தால், அது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 1951-இன் கீழ், 3 ஆண்டுகளுக்கு எம்.பி. பதவியை பறிக்க வழிவகுக்கும்’

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement