For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ராரா சரசக்கு ராரா.. ‘சந்திரமுகி’ வெளியாகி 19 ஆண்டுகள் நிறைவு!

01:14 PM Apr 14, 2024 IST | Web Editor
ராரா சரசக்கு ராரா   ‘சந்திரமுகி’ வெளியாகி 19 ஆண்டுகள் நிறைவு
Advertisement

பி.வாசு இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம்  ‘சந்திரமுகி’ வெளியாகி இன்றுடன் 19 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 

Advertisement

90களில் தமிழ் சினிமாவின் அசைக்கமுடியாத வசூல் சக்கரவர்த்தியாக வலம் வந்தவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். பாபா படத்தின் மூலமாக தன்னுடைய 20ஆம் நூற்றாண்டின் வெற்றிக்கணக்கை தொடங்க நினைத்தார். ஆனால், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய அடியை கொடுத்தது பாபா. அப்படத்தின் தோல்வியால் தயாரிப்பாளர்களே தன்னை பார்த்து ஜெர்க் ஆனார்கள் என்று ரஜினியே கூட குறிப்பிட்டிருப்பார்.

இந்நிலையில் ‘நான் யானை இல்ல குதிரை’ என்று சொல்லி அடுத்து வீறுகொண்டு எழுந்த ரஜினிகாந்த் சந்திரமுகியின் மூலமாக சரித்திர வெற்றியை அடைந்தார். பி. வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, நாசர், நயன்தாரா, வடிவேலு, பிரபு, வினீத், மாளவிகா என மிகப்பெரிய திரை பட்டாளமே நடித்திருந்த படம் சந்திரமுகி. தமிழ் சினிமாவில் இன்று வரை திரையரங்கில் அதிக நாட்கள் ஓடிய படம் என்றால் அது சந்திரமுகிதான்.

இந்தப் படம் கன்னட படமான அப்தமித்ராவின் ரீமேக் ஆகும். அந்த அப்தமித்ரா, மலையாளப் படமான மணிசித்ரதாழுவில் இருந்து ரீமேக் செய்யப்பட்டிருந்தது. படம் மட்டுமின்றி வித்யாசாகரின் இசையில் தேவுடா தேவுடா, கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம், அத்திந்தோம், கொக்கு பரபர கோழி பரபர, அண்ணனோட பாட்டு, ராரா ஆகிய பாடல்கள்  அனைத்தும் சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றது.

மலேசியா, ஸ்ரீலங்கா, அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலக நாடுகளிலும் சந்திரமுகி வெளியாகி நல்ல வசூலைப் பெற்றது. ஜப்பானின் 18வது டோக்கியோ திரைப்பட விழாவிலும் சந்திரமுகி திரையிடப்பட்டது. பல விருதுகளையும், பாராட்டுகளையும் குவித்தது சந்திரமுகி. கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியானது சந்திரமுகி திரைப்படம். இத்திரைப்படம் வெளியாகி இன்றுடன் 19 ஆண்டுகள் நிறைவடைகிறது. 19 ஆண்டுள் நிறைவடைந்தும் இன்றும்  எதிர்பார்ப்பை அப்படியே வைத்திருக்கும் திரைப்படம் என்றால் அது சந்திரமுகிதான்.

Tags :
Advertisement