வீடியோ பார்த்துக்கொண்டே பைக்கை இயக்கும் ரேபிடோ டிரைவர்... வைரலாகும் வீடியோ!
யூடியூபில் வீடியோ பார்த்துக்கொண்டே இருசக்கர வாகனத்தை இயக்கும், ரேபிடோ ஓட்டுநரின் செயல் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
சாலையில் வாகனங்கள் ஓட்டும்போது தொலைபேசியை பயன்படுத்தக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. இதுசம்பந்தமான விழிப்புணர்வுகளும் அடிக்கடி காவல்துறையால் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான மக்கள் ஓலா, உபர் மற்றும் ராபிடோ போன்ற ஆப்கள் மூலமாக வாகனங்கள் முன்பதிவு செய்து தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ரேபிடோ ஓட்டுநர் ஒருவரின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சாய் சந்த் என்ற நபர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், ரேபிடோ ஓட்டுநர் இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டே போனில் யூடியூப் வீடியோக்களை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பகிரப்பட்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது வரை 1.2 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்து பயனர்கள்,
பைக் மட்டுமல்ல. ஆட்டோ ஓட்டுநர்களும் இன்ஸ்டாகிராமில் வீடியோ பார்த்துக்கொண்டு வண்டி ஓட்டுகின்றனர்.
இது நகைச்சுவையல்ல. இதுகுறித்து புகார் செய்யுங்கள். இல்லையெனில் அவர் அதை மீண்டும் செய்வார். அடுத்த முறை யாராவது தங்கள் உயிரை இழக்க நேரிடும். இதுபோன்று ஓட்டுநர்களின் செயல் தொடர்ந்து வருகிறது என பயனர்கள் விமர்சித்து வருகின்றனர்.