கிருஷ்ணகிரி அருகே மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - ஆசிரியர்கள் 3 பேர் இடைநீக்கம்!
கிருஷ்ணகிரி அருகே மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கைதான 3 ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
04:25 PM Feb 05, 2025 IST | Web Editor
Advertisement
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசு மேல்நிலை பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த ஒரு மாதகாலமாக பள்ளி வராமல் இருந்துள்ளார். இதைத் தொடர்ந்து, தலைமை ஆசிரியர் மாணவியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தியதில் மாணவி கர்ப்பம் அடைந்து கருக்கலைப்பு செய்திருப்பதாக தெரியவந்தது.
Advertisement
இதையடுத்து மாணவியின் பெற்றோரின் புகாரை அடுத்து அதே பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் சின்னசாமி, ஆறுமுகம், பிரகாஷ் ஆகிய 3 பே,ர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மறுகூர் அனைத்து காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து 3 ஆசிரியர்களையும் இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவி கிரிஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.