For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#DulqerSalman உடன் இணையும் ராணா டகுபதி - புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

09:22 PM Sep 08, 2024 IST | Web Editor
 dulqersalman உடன் இணையும் ராணா டகுபதி   புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்ட படக்குழு
Advertisement

துல்கர் சல்மான் மற்றும் ராணா டகுபதி இணைந்து நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

Advertisement

மலையாளம் , தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனதுஇ திறமையான நடிப்பின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் நடிகர் துல்கர் சல்மான். அவரது தனித்துவமான படங்கள் தேர்வு மூலம் இன்று அவர் பெரும் உயரத்தை எட்டியது மட்டுமல்லாமல் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக உள்ளார். ‘சீதா ராமம்’ போன்ற கிளாசிக் மற்றும் ‘கிங் ஆஃப் கொத்தா’ போன்ற கேங்ஸ்டர் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, அவர் இப்போது தெலுங்கில் வெங்கி அட்லூரியுடன் இயக்கத்தில் ‘லக்கி பாஸ்கர்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் வரும் அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக துல்கர் சல்மான் மற்றும் ராணா தகுபதி இருவரும் இணைந்து காந்தா என்ற படத்தில் நடிக்கவுள்ளனர். இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை விழா இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.

இப்புதிய படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு. மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தை வேஃபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் இயக்குநர் இதற்கு முன்பு நெட்பிலிக்ஸ்- இல் வெளியான தி ஹண்ட் ஃபார் வீரப்பன் மற்றும் நிலா போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement