For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ராமேஸ்வரம் கஃபே விவகாரம் : தமிழர்களுக்கு எதிராக அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கோரினார் மத்திய அமைச்சர் #Shobha!

07:10 PM Sep 03, 2024 IST | Web Editor
ராமேஸ்வரம் கஃபே விவகாரம்   தமிழர்களுக்கு எதிராக அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கோரினார் மத்திய அமைச்சர்  shobha
Advertisement

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில் மன்னிப்புக்கோரி மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழ்நாட்டை சேர்ந்த நபர் தான் காரணம் என மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இரு பிரிவினரிடையே கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஷோபா கரந்தலஜே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஷோபா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று (செப். 3) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இணையமைச்சர் ஷோபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில் மன்னிப்புக்கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

அதில், குண்டு வெடிப்பில் தமிழர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறிய கருத்து எந்த உள்நோக்கத்துடனும், தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் கருத்து தெரிவிக்கவில்லை என கூறப்பட்டுள்ளது. தனது கருத்து தமிழர்களை புண்படுத்தியதை புரிந்து கொண்டு சமூக வலைதளங்களில் மன்னிப்புக் கோரியதாகவும், தமிழர்களின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் பண்பாடு மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும் அந்த பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது கருத்து யாரையாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு மன்னிப்புக்கோருவதாக இணையமைச்சர் ஷோபா சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வழக்கின் விசாரணையை செப்டம்பர் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags :
Advertisement