Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பில் தொடர்பு - பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்!

05:45 PM Apr 05, 2024 IST | Web Editor
Advertisement

ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பில் தொடர்பு உள்ளதாக கூறி  தேசிய புலனாய்வு முகமை பாஜக நிர்வாகியை  கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

பெங்களூருவில் உள்ள வைட்ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் உணவகத்தில் மார்ச் 1 ஆம் தேதி 2 ஐஇடி குண்டுகள் வெடித்தன.  இரண்டு வெடிப்புகளும் ஒன்றன் பின் ஒன்றாக நடந்தன.  இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.  இந்த சம்பவம் குறித்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி  வந்தனர்.   முதல்கட்டமாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதன் மூலம் குற்றவாளியை அடையாளம் கண்டனர்.   அந்த குற்றவாளி சாம்பல் நிற சட்டை,  கருப்பு பேன்ட்,  முகமூடி அணிந்த வாறு கையில் இரண்டு பைகளுடன் வந்துள்ளார்.  பின்னர் ராமேஸ்வரம் ஓட்டலில் உணவருந்திவிட்டு கைகழுவும் இடத்தில் வெடிகுண்டு உள்ள பையை வைத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் இந்த குண்டு வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் (NIA) ஒப்படைத்தது.  இதனையடுத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.  இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அளிக்கப்படும் என என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மூன்று மாநிலங்களில் நடத்திய சோதனையின் எதிரொலியாக பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான முசாமில் செரிப் ஹுசைன் கைது செய்யப்பட்டார் என என்.ஐ.ஏ. தெரிவித்திருந்தது.

இதனிடையே கடந்த வாரம் ஷிவ்மோகா பகுதியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சோதனை நடத்தியதில் 2 இளைஞர்களை கைது செய்தனர். இந்நிலையில் அவர்களின் செல்போன்கள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது பாஜக நிர்வாகியான சாய் பிரசாத் என்பவர் உடன் இருவரும் அடிக்கடி தொடர்பில் இருந்து வந்தது தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியானது.

இதனை தொடர்ந்து பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவக குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பாஜக நிர்வாகி சாய் பிரசாத் என்பவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவத்தில் பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்ட   சம்பவம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
BangloreBJPBJP Nehtabomb blastNIARameswaram Cafe
Advertisement
Next Article