For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

'ராமாயணா' திரைப்படம் - ரன்பீர் கபூர், யாஷ் ஆகியோர் இணைந்து தோன்றும் திரை நேரம் குறைவு!

'ராமாயணா' திரைப்படத்தில் ரன்பீர் கபூர், யாஷ் ஆகியோர் இணைந்து தோன்றும் திரை நேரம் குறைவாக இருக்க வேண்டும் என படக்குழு முடிவெடுத்துள்ளது.
09:14 PM May 23, 2025 IST | Web Editor
'ராமாயணா' திரைப்படத்தில் ரன்பீர் கபூர், யாஷ் ஆகியோர் இணைந்து தோன்றும் திரை நேரம் குறைவாக இருக்க வேண்டும் என படக்குழு முடிவெடுத்துள்ளது.
 ராமாயணா  திரைப்படம்    ரன்பீர் கபூர்  யாஷ் ஆகியோர் இணைந்து தோன்றும் திரை நேரம் குறைவு
Advertisement

நமித் மல்ஹோத்ரா தயாரிக்கும் ' ராமாயணா ' திரைப்படம் சமீபத்திய காலங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும்.‌ தொழில் துறையில் சில சிறந்த திறமையாளர்கள், உலக தரம் வாய்ந்த VFX குழு, நட்சத்திர நடிகர்கள், பிரம்மாண்டமான மற்றும் அதிவேகமாக உருவாக்கப்படும் அரங்கங்கள், என ' ராமாயணா ' இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு திரைமொழியாகவும் மற்றும் உணர்வு பூர்வமான படைப்பாகவும் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், யாஷ் ராவணனாகவும் நடித்திருந்தாலும். அவர்கள் ஒன்றாக திரையில் தோன்றும் நேரம் குறைவு என சொல்லப்படுகிறது.

Advertisement

இப்படத்தின் தயாரிப்பாளர்கள் அசலான வால்மீகி உரைக்கு உண்மையாக இருப்பது என்பதை தேர்ந்தெடுத்துள்ளனர். அதன்படி ராமர் - ராவணனின் உலகங்கள் தனித்தனியாகவே உள்ளன. உச்சக்கட்ட போரில் விதி அவர்களை நேருக்கு நேர் கொண்டு வரும் வரை அவர்களின் கதைகள் இணையாகவே விரிவடைகின்றன. அசல் கதையின் படி, சீதை கடத்தப்பட்ட பின்னரே ராமர்- ராவணனின் இருப்பை பற்றி அறிந்து கொள்கிறார். மேலும் இலங்கையில் போர்க்களத்தில் மோதல் ஏற்படும் வரை இருவரும் ஒருபோதும் ஒருவரை ஒருவர் சந்திக்க மாட்டார்கள்.

ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் கதாபாத்திரங்களை தனித்தனியாக வைத்திருக்க நிதிஷ் திவாரி மற்றும் குழுவினரின் படைப்பு தேர்வு, ராமாயணத்திற்கு ஒரு விருப்பத்திற்குரிய கதை ஆழத்தை உருவாக்குகிறது. அவர்களின் தனித்தனியான பயணங்களை ஒன்று தர்மத்தையும், நல்லொழுக்கத்தையும் உள்ளடக்கியதாகவும். மற்றொன்று ஈகோ மற்றும் சக்தியால் இயக்கப்படுவதாகவும்  பட்டியலிடுவதன் மூலம் இந்த திரைப்படம் அவர்களின் இறுதி மோதலுக்கான உற்சாகத்தை அதிகரிக்கிறது.

ராவணனான யாஷ், சீதாவாக நடிக்கும் சாய் பல்லவி மற்றும் அனுமனாக நடிக்கும் சன்னி தியோலுடன் திரை நேரத்தை பகிர்ந்து கொள்ளும் அதே தருணத்தில், ரன்பீர் கபூர் உடனான காட்சிகள் நிச்சயமற்றதாகவே உள்ளன. ரன்பீர் கபூர் தற்போது சஞ்சய் லீலா பன்சாலியின் லவ் & வார் படத்தில் விக்கி கௌசல் மற்றும் ஆலியா பட் ஆகியோருடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் அந்த படத்திற்காக அவர் பராமரிக்கும் குறிப்பிட்ட தோற்றம் இந்த படத்திற்கான அவரது பங்களிப்பை குறைக்கிறது.

படத்தின் தயாரிப்பு பணிகள் தற்போது பிரம்மாணடமாக நடந்து வருகிறது. இந்தத் திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாரிக்கப்படுகிறது. முதல் பாகம் 2026 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையிலும், இரண்டாவது பாகம் 2027 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையிலும் வெளியாகிறது. ரன்பீர் கபூர் ஏற்கனவே தனது பகுதிகளை நிறைவு செய்து விட்ட நிலையில், மே மாத தொடக்கத்தில் உஜ்ஜயினியில் உள்ள மகாமல் ஆலயத்திற்கு சென்ற பிறகு, யாஷ் தனது பகுதிகளில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

முன்னணி கதாபாத்திரங்களுக்கு இடையில் பகிரப்பட்ட திரை நேரத்தை குறைப்பதற்கான தேர்வு, நவீன சினிமா திரை மொழியை காட்சியாக வடிவமைக்கும் போது, அசல் காவியத்தின் சாரம்சத்தை மதிக்கும் தயாரிப்பாளர்களின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. நட்சத்திரங்கள் நிறைந்த படங்கள் - பெரும்பாலும் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்க , பெரிய பெயர்களுக்கு இடையிலான தொடர்புகளை கட்டாயப்படுத்தும். ராமாயணம் என்பது மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட கதை சார்ந்த பாதையை பிரதிபலிக்கிறது. இது நம்பகத் தன்மைக்கு முன்னுரிமை அளிக்கிறது.

Tags :
Advertisement