For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அயோத்தி சென்ற விமானத்தில் ராமர் பாடல் | பயணிகளின் செயல் இணையத்தில் வைரல்...!

03:19 PM Jan 19, 2024 IST | Web Editor
அயோத்தி சென்ற விமானத்தில் ராமர் பாடல்   பயணிகளின் செயல் இணையத்தில் வைரல்
Advertisement

இண்டிகோ விமானத்தில் பயணிகள் "ராம் ஆயங்கே" (ராமர் குறித்த பக்தி பாடல்) என்று பாடும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறாது.

Advertisement

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்ததாக நம்பப்படுகிறது.  இந்நிலையில்,  அவருக்கான கோயிலை கட்ட கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.  360 அடி நீளம்,  235 அடி அகலம், 161 அடி உயரத்தில்,  3 மாடிகள்,  5 குவிமாடங்கள்,  கோபுரம்,  360 தூண்கள் என பிரமாண்டமாக ரூ.1,100 கோடியில் கோயில் கட்டப்பட்டு வருகிறது.  இந்த கோயிலில் வரும் 22ம் தேதி குழந்தை ராமர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது.

22ஆம் தேதி பிற்பகல் 12.29.08 மணிமுதல் 12.30.32 வரை (84 விநாடிகளில்) பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.  பதினாறு பொருத்தங்களில் 10 பொருத்தங்கள் சிறப்பாக அமைந்துள்ளதால் இக்குறுகிய காலத்தில் பிரதிஷ்டை நடைபெறவுள்ளது என ஸ்ரீராமஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறியுள்ளார்.  குழந்தை ராமரின் சிலையின் பீடம் 3 அடி உயரத்தைக் கொண்டது.  இச்சிலை மக்ரானா மாா்பிள் கற்களால் செய்யப்பட்டு,  அதன் மீது தங்கக் கவசம் பொருத்தப்பட்டுள்ளது.

ராமர் சிலை பிரதிஷ்டை,  பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்,  உ.பி., கவர்னர் ஆனந்திபென் படேல்,  முதல்வர் யோகி ஆதித்யநாத்,  கோயில் அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது.  இந்த நிகழ்வில் நாடு முழுவதும் இருந்து முக்கிய தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்க வைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில்,  அயோத்தியை நோக்கிச் சென்ற இண்டிகோ விமானத்தில் பயணிகள் "ராம் ஆயங்கே" (ராமர் குறித்த பக்தி பாடல்) என்று பாடும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.  இந்த வீடியோவை இந்திய அரசின் அதிகாரப்பூர்வ பக்கமான MyGov பகிர்ந்துள்ளது.  பக்திப் பாடலுக்கு பயணிகள் கைதட்டி பாடுவதை வீடியோவில் காணலாம். ஒரு சிலர் இந்த காட்சியை தங்கள் ஸ்மார்ட்போனில் பதிவு செய்ததையும் நம்மால் காண முடிகிறது.

Advertisement