For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#RakshaBandhan: அக்காவுக்கு சிறுநீரகத்தை பரிசாக தந்து புதுவாழ்வு கொடுத்த தம்பி!

10:16 AM Aug 20, 2024 IST | Web Editor
 rakshabandhan  அக்காவுக்கு சிறுநீரகத்தை பரிசாக தந்து புதுவாழ்வு கொடுத்த தம்பி
Advertisement

கோவாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அவரது தம்பி சிறுநீரகத்தில் ஒன்றை தானமாக வழங்கி, புதுவாழ்க்கையை பரிசாக அளித்து நெகிழச் செய்துள்ளார்.

Advertisement

வடமாநிலங்களில் மிகவும் பிரபலமான ரக்‌ஷா பந்தன் பண்டிகை நேற்று (ஆக.19) நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. அண்ணன் - தங்கைகளுக்கு இடையிலான பாசப் பிணைப்பை பறைசாற்றும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி, ராகுல் காந்தி எம்.பி உள்ளிட்ட பலரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் ரக்‌ஷா பந்தன் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.

சகோதர பாசத்தை வெளிப்படும் ரக்ஷா பந்தன் பண்டிகையின்போது, ராக்கி கட்டும் சகோதரிக்கு பரிசாக பணம் வழங்கி அன்பை வெளிப்படுத்தும் சகோதரர்களை பாா்த்திருப்போம். ஆனால், கோவாவைச் சேர்ந்த பெண்ணுக்கு அவரது தம்பி தனது சிறுநீரகத்தில் ஒன்றை தானமாக வழங்கி, புதுவாழ்க்கையை பரிசாக அளித்து நெகிழச் செய்துள்ளார்.

இது தொடர்பாக பெண்ணுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட தனியார் மருத்துவமனை மருத்துவர் கூறுகையில், ‘பாலிசிஸ்டிக் சிறுநீரக நோயால் 43-வயதான அந்தப் பெண் பாதிக்கப்பட்டிருந்தார். நோயின் இறுதிக் கட்டத்தில் இருந்ததால், அவசர சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. நோயாளியின் தம்பி, அவரின் சிறுநீரகத்தில் ஒன்றை தானம் செய்யத் தயாராக இருந்தார். லேப்ராஸ்கோபிக் சிறுநீரக தானம் முறையில் கடந்த ஏப்ரல் மாதம் உறுப்பு தானம் செய்யப்பட்டது. இதன்மூலம், உடல் உறுப்பு தானம் செய்வதில் இருவரும் முன்னுதாரனமாக மாறியுள்ளனர்’ என தெரிவித்தார்.

இதுகுறித்து அப்பெண்ணின் கணவர் கூறுகையில், “சிறு வயதில் இருந்தே இருவரும் மிகுந்த பாசத்துடன் உள்ளனர். இந்த ஆண்டு புதிய வாழ்வை தனக்கு பரிசாக அளித்திருப்பதால் சகோதரனுக்கு ராக்கி கட்டும்போது எனது மனைவி மிகவும் உணர்வுப்பூா்வமாக இருந்தது. நிகழாண்டு ரக்ஷா பந்தன் பண்டிகை எங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது” எனத் தெரிவித்தார்.

Tags :
Advertisement