Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மாநிலங்களவைத் தேர்தல் முடிவுகள் | 3 இடங்களில் காங்கிரஸ் வெற்றி!

09:09 PM Feb 27, 2024 IST | Web Editor
Advertisement

கர்நாடகாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட 3 வேட்பாளர்களும், பாஜக சார்பில் நிறுத்தப்பட்ட ஒரு வேட்பாளரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மாநிலங்களவை எம்.பி.க்கான தேர்தல் இன்று நடைபெற்றது. போட்டி ஏற்பட்டுள்ள கர்நாடகா, உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேசம் மாநிலங்களில் தேர்தல் நடத்தப்பட்டது. கர்நாடகா மாநிலத்தில் நான்கு இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. காங்கிரஸ் சார்பில் மூன்று பேரையும், பா.ஜனதா தலைமையில் ஒருவரையும் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் பா.ஜனதாவுடன் கூட்டணியில் உள்ள மதசார்பற்ற ஜனதா தளம் வேட்பாளரை நிறுத்தியது. இதனால் போட்டி ஏற்பட்டது.

பா.ஜனதா ஒரு இடத்தில் வெற்றி பெற 45 எம்.எல்.ஏ.-க்கள் போதுமான வகையில் இருந்தனர். 2-வது வேட்பாளராக மதசார்பற்ற ஜனதா தளம் குபேந்திர ரெட்டியை நிறுத்தியது. 2-வது வேட்பாளர் வெற்றி பெற வேண்டுமென்றால் காங்கிரஸ் கட்சியின் சில எம்.எல்.ஏ.-க்கள் வாக்களிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது.

இந்நிலையில், பா.ஜனதா எம்.எல்.எ.ஏ சோமசேகர் என்பவர் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்தார். இதனால் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் வேட்பாளர் தோல்வியடைந்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜய் மக்கான், ஜிசி சந்திரசேகர், சையத் நசீர் ஹுசைன் ஆகியோர் வெற்றி பெற்றனர். பா.ஜனதா சார்பில் நாராயண்சா கே. பண்டேகே வெற்றி பெற்றார்.அஜய் மக்கானுக்கு 47 எம்.எல்.ஏ.-க்களும், சையத் நசீர் ஹுசைனுக்கு 46 எம்.எல்.ஏ.-க்களும், ஜிசி சந்திரசேகருக்கு 46 எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்திருந்தனர்.

Tags :
election 2024Election2024Karnataka PoliticsParliament Election 2024Rajya Sabha elections
Advertisement
Next Article