For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ராஜ்கோட் பயங்கர தீ விபத்து : "இது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு" - குஜராத் உயர்நீதிமன்றம்!

06:05 PM May 26, 2024 IST | Web Editor
ராஜ்கோட் பயங்கர தீ விபத்து    இது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு    குஜராத் உயர்நீதிமன்றம்
Advertisement

ராஜ்கோட் விளையாட்டு மைய தீ விபத்து குறித்து தாமாக முன் வந்து விசாரணை செய்த குஜராத் உயர்நீதிமன்றம் இது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு என தெரிவித்துள்ளது. 

Advertisement

குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் சிறுவர்களுக்கென பிரத்யேகமான டிஆர்பி விளையாட்டு மையம் (TRP game zone) அமைந்துள்ளது. தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விளையாட்டு மையத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்குமான விளையாட்டுகள், பொழுதுபோக்கு தளங்கள், உணவு விடுதிகள் உள்ளிட்டவை உள்ளன.

தற்போது கோடை விடுமுறை என்பதால் சிறுவர்கள், சிறுமியர்கள், என பலரும் இந்த டிஆர்பி விளையாட்டு மையத்திற்கு நேற்று வருகை தந்தனர். இந்நிலையில் அங்குள்ள ஒரு அறையில் எதிர்பாராத வகையில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ சற்று நேரத்துக்குள்ளாக விளையாட்டு மையம் முழுவதும் பரவியது.

இதனால் அந்தப் பகுதியே புகை மண்டலம் ஆனது. இந்த பயங்கர தீ விபத்தில் சிக்கி தற்போது வரை 9 குழந்தைகள் உள்பட 27 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை இந்த தீ விபத்து ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர பட்டேல், உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி ஆகியோர் விபத்து குறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளனர். தீ விபத்தில் சிக்கியவர்களது உடல்கள் அடையாளம் தெரியாத அளவிற்கு எரிந்து இருப்பதால் அவர்களுக்கு டிஎன்ஏ சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : "வைகோவுக்கு அறுவை சிகிச்சை! அச்சம் கொள்கிற வகையில் எதுவும் இல்லை!" – துரை வைகோ பதிவு!

இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்து குறித்து தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட குஜராத் சிறப்பு நீதிமன்றம் " இது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு"
என்று கூறியுள்ளது.

இது தொடர்பாக நீதிபதிகள் கூறியதாவது :

"இந்த பயங்கர தீ விபத்து மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு. இந்த விவகாரம் குறித்து நாளை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும். அப்போது மாநிலங்களில் உள்ள விளையாட்டு மையங்கள் தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்படும். ஏற்கனவே இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திட 5 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை குஜராத் அரசு அமைத்துள்ளது. இந்த குழு விரைவாக விசாரணை நடத்தி 72 மணி நேரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது" இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

Tags :
Advertisement