Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ராஜ்கோட் தீ விபத்து! அனுமதி இல்லாமல் விளையாட்டு மையம் இயங்கியது அம்பலம்!

04:51 PM May 26, 2024 IST | Web Editor
Advertisement

குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட விபத்தில் 27 பேர் உயிரிழந்த நிலையில்,  அந்த விளையாட்டு மையம் அரசின் எந்த அனுமதியும் பெறாமல் இயக்கியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement

குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் சிறுவர்களுக்கென பிரத்யேகமான டிஆர்பி விளையாட்டு மையம் (TRP game zone) உள்ளது.  அங்கு சிறாா்கள் உள்பட ஏராளமானோா் நேற்று விளையாடிக் கொண்டிருந்தனா்.  அப்போது திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ கொழுந்துவிட்டு எரிந்து அந்தப் பகுதி புகை மண்டலமாகக் காட்சியளித்த நிலையில், தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இந்த தொடா்பாக ராஜ்கோட் காவல் துறை உதவி ஆணையா் விநாயக் படேல் கூறுகையில், "விபத்தில் இதுவரை சிறாா்கள் உள்பட 27 போ் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது.  சடலங்கள் முற்றிலும் எரிந்துவிட்டதால், இறந்தவா் யாா் என்பதை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது" என்றாா்.  இந்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகாத நிலையில், விபத்து தொடா்பாக விசாரணை மேற்கொள்ள சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) மாநில அரசு அமைத்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்த நிலையில் தீ விபத்து நடந்த விளையாட்டு மையம்,  அரசின் தடையில்லா சான்று பெறாமலேயே இயக்கி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.  மாநகராட்சி, தீயணைப்புத்துறை ஆகியவற்றிடம் இருந்து தேவையான எந்த அனுமதியும் பெறவில்லை எனவும்,  ஒரே ஒரு அவசர வழி மட்டுமே அங்கு இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனிடையே சம்பவம் நடந்த இடத்தை குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

Tags :
Fire accidentGujaratRajkot
Advertisement
Next Article