For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ரஜினியின் மாஸ் Dialogue… சர்ச்சையில் சிக்கிய #Vettaiyan!

08:19 PM Sep 21, 2024 IST | Web Editor
ரஜினியின் மாஸ் dialogue… சர்ச்சையில் சிக்கிய  vettaiyan
Advertisement

வேட்டையன் திரைப்படம் என்கவுன்ட்டரை நியாயப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டிருப்பதாக சர்ச்சையான கருத்துகள் எழுந்துள்ளது.

Advertisement

ஜெய்பீம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டையன்’. இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் தொழில்நுட்ப வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. முன்னதாக ‘வேட்டையன்’ திரைப்படத்தின் கதாப்பாத்திரங்களை கடந்த 16ம் தேதி முதல் அறிமுகம் செய்யவுள்ளதாக படக்குழு அறிவித்தது.

அதன்படி, ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், அமிதாப் பச்சன் ஆகியோரில் கதாபாத்திரத்தை படக்குழு அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக இப்படத்தின் மனசிலாயோ பாடல் வெளியாகி கவனம் பெற்றது. இந்த சூழலில், இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஹண்டர் வன்ட்டார்’ என்ற பாடலும், முன்னோட்டக்காட்சியும் நேற்று வெளியானது.

அந்த முன்னோட்டக் காட்சியில் நடிகர் ரஜினிகாந்த், “என்கவுன்டர் என்பது குற்றம் செய்வதர்களுக்கு கொடுக்கும் தண்டனை மட்டுமல்ல... இனிமேல் இதுபோல் நடக்கக் கூடாது என்பதற்காக எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை” என்ற வசனத்தைப் பேசி இருந்தார். இதனால், வேட்டையன் திரைப்படம் என்கவுன்டரை நியாயப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டிருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags :
Advertisement